In The Name Of Allah

உலக மக்களுக்கு ஓர் இறையை நிலைநாட்ட உத்தம நபியின் மூலம் அருள் மறையாம் அல்குர்ஆணை வழங்கிய அழகிய மார்க்கம்

Thursday, December 2, 2010

பர்தாவே பாதுகாப்பு

தன்னுடைய குடியிருப்பிற்கு அருகில் உள்ள வல்மார்ட் ஷோரூமிற்கு கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று ரேஹான் சிஹாம் பொருட்களை வாங்குவதற்காக சென்றார். முஸ்லிம்களின் மரபாடையான “ஹிஜாப்’பை அவர் அணிந்திருந்தார். அங்கிருந்த ஒரு கிறிஸ்துவர் அவரை நேரிடையாகப் பார்த்து, “The 12 Days of Christmas” என்னும் பாடலை பாடத் தொடங்கினார். உஸாமா பின் லாடனையும் பயங்கரவாதத் தையும் கிண்டலடிக்கும் வண்ணம் பாடினார்.

சிஹாமுக்கு என்னவோ போலிருந்தது. “என்னைப் பார்த்தால் பயங்கரவாதியாக உனக்கு தெரிகின்றதா?’ எனக் கேட்டார்.
“பயங்கரவாதிகள் வேறு எப்படி இருப்பார்களாம்?’ என்றான் அவன்.

இப்படிப்பட்ட தருணங்களை அமெரிக்க முஸ்லிம்கள் அடிக்கடி எதிர்கொள்ள நேரிடுகின்றது. Pew Research Center என்னும் நிறுவன கணக்கின்படி 53 சதவிகித முஸ்லிம்கள் செப்டம்பர் 2001 தாக்குதலுக்குப் பிறகு, “முஸ்லிமாக’ அமெ ரிக்காவில் வசிப்பது கடினமாகி வருவதாக உணருகிறார்கள். அதிலும் குறிப்பாக ஹிஜாப் அணிந்து கொண்டு பொதுவிடங் களுக்கு செல்வது மிகவும் இடரளிக்கும் செயலாகவே உள்ளது.

தம்முடைய தலைமுடியை மறைக்கின்ற வகையில் எளிமை யான ஒரு முக்காட்டையே (ஸ்கார்ஃப்) பெரும்பாலான பெண் கள் அணிகிறார்கள். பர்தா என சொல்லத்தக்க ஆடையை அணி வது ஒரு குற்றச்செயலாக கருதப்படுகின்றது. பல அரசாங்கங்கள் அந்த நிகழ்விற்குப் பிறகு, பொதுத் தளங்களில் பர்தா அணிந்து வருவதை தடை செய்து விட்டன. பல அரசுகள் தடை செய்வது குறித்து யோசித்து வருகின்றன. ஒரு நிகழ்வை மையப்படுத்தி இஸ்லாமிய அடையாளம் ஒன்றை அடியோடு ஒழித்து இல்லா மலாக்கிவிடும் முயற்சிகளை உலகில் பல அரசுகளும் தீவிரப்படுத்தி வருகின்றன.

முஸ்லிம் பெண்கள் ஏன் ஹிஜாப் அணிகிறார்கள் என்பதை வெளிப்படுத்தும் வகையில் God’s Warriors என்னும் நிகழ்ச்சி ஒன்றை CNN தொலைக்காட்சி சில மாதங்களுக்கு முன் ஒளிபரப்பியது.

“பார்வைகளை என்னுடைய புறத்தோற்றத்தில் இருந்து என்னு டைய அகத்தை நோக்கி நான் திருப்ப எண்ணுகிறேன். எனக்கு பிடிக்காத விதத்தில் என்னை யாரும் அணுகுவதை நான் விரும்ப வில்லை!’ என எகிப்தைச் சார்ந்த ஸிஹாத் அல் ஃகலீக் கூறுகிறார்.

அல்ஃகலீக் ஆங்கிலத்தையும் ஜெர்மனையும் சரளமாக பேசுகி றார். ஐரோப்பாவில் கல்வி கற்றுள்ளார். கிதார் வாசிக்க கற்றுள் ளார். பெண்களுக்காக பாடுபடும் ஓர் அமைப்பில் பணியாற்று கிறார். எப்போதும் ஹிஜாபை அணிந்துள்ளார்.
சமய காரணத்திற்காக மட்டுமல்ல! “சமயக்கடமை என்னுமளவில் இதை விவாதப் பிரச்சனையாக ஆக்குவதை விட பெண்களுக்குத் தேவையான அடக்கம், பண்பு என்னும் வகையில் ஹிஜாப் அணிவதற்கே நான் முக்கியத்துவம் அளிக்கிறேன்’ என்கிறார் அவர்.

சிஹாமை பொருத்தவரை ஹிஜாப் அணிவது ஒரு மார்க்கக் கடமை. “இறைவனின் விருப்பம் அது!’ என்கிறார் அவர். “ஹிஜாப் அணிவது இறையாணை. நாங்கள் திரையிட வேண்டும்; அடக் கத்தோடு இருக்கவேண்டும் என அவன் கட்டளை இட்டுள்ளான்.

ஆனால், நினைத்ததைப் பின்பற்றுவது ஒன்றும் சிஹாமுக்கு அவ்வளவு எளிதான செயலாக இருக்கவில்லை. இத்தனைக்கும் அவர் அணிவது தலையை மறைக்கும் ஸ்கார்ஃப் மட்டுமே.

“ஆரம்பத்தில் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. என் உள்ளம் படபடவென்று அடித்துக்கொண்டது. கடைசியில் எனக்கு நானே கூறிக் கொண்டேன். “என்னவாயினும் சரி, நீ தைரியமாக ஹிஜாப் அணிந்துகொள். ஒருபோதும் யாருக்காகவும் விட்டுவிடாதே!’

ஒரு நல்ல இறைநம்பிக்கை கொண்ட முஸ்லிமாக இருக்க வேண்டுமெனில் ஹிஜாப் அணிந்தே ஆகவேண்டும் என அவர் நினைக்கிறார். இளம் வாலிபர்களுடைய கிண்டலைக் கண்டு அவர் பயந்து மனம் புழுங்கினாலும் இறுதிவரை ஹிஜாபைத் தொடருவது என் னும் முடிவில் உறுதியாக இருக் கிறார்.

இங்கே நம்முடைய பெண்களின் நிலையை கொஞ்சம் ஒப் பிட்டுப் பாருங்கள். ஒரு வி­யம் மட்டும் தெளிவாக விளங்கு கின்றது. எங்கே எதிர்ப்புகள் மிகுகின்றனவோ அங்கேதான் இஸ்லாமை பின்பற்றியே தீர வேண்டும் என்னும் வைராக்கியமும் உறுதிப்பாடும் பிறக் கும் எனத் தோன்றுகின்றது.

மறுபடியும் ஒருமுறை சிஹாம் சொல்வதைக் கேளுங்கள். “”இறை திருப்திக்காக உலகில் வாழ்வதே என்னுடைய எண்ணம். குறிக் கோள். என் னைப் பார்த்தால் பயங்கரவாதியைப்போல இருப்ப தாக மக்கள் கூறுகிறார்கள். நான் பயங்கரவாதியைப் போல காட்சி யளிப்பதைப் பற்றியயல்லாம் கவலைப்பட வில்லை. யாரோ ஒருவருடைய மனதில் பயமுறுத்துவதைப்போல தென்படுவதை விட அசிங்கமாக காட்சியளிப்பதுதான் என்னை உறுத்துகின் றது”
தன்னுடைய இறைநம்பிக்கையில் மிக முக்கியமான பங்கை தனது ஹிஜாப் ஆற்றுவதாக சிஹாம் நம்புகிறார். “என்னிஷ்டப்படி என் வாழ்க்கையை வாழ்வதற்கு நான் இங்கு வரவில்லை. இறைவனுக்கு அடிபணிந்து வாழ்வதற்கே நான் வந்துள்ளேன்’ என்கிறார் அவர்.

- திசையன்
நன்றி: சமுதாயாவ்ற்றுமை.காம்

No comments:

Post a Comment