In The Name Of Allah

உலக மக்களுக்கு ஓர் இறையை நிலைநாட்ட உத்தம நபியின் மூலம் அருள் மறையாம் அல்குர்ஆணை வழங்கிய அழகிய மார்க்கம்

Thursday, November 17, 2011

பகுத்தறிவாளர்களின் கடவுள்!

தான் (மட்டும்) ஏற்கும் அல்லது மறுக்கும் நம்பிக்கை சார்ந்த ஒரு விசயத்தை அறிவு ரீதியாகப் பிறருக்கு விளக்க வேண்டிய அவசியமில்லை. அத்தகைய நிகழ்வைப் பிறர் விரும்பினால் உண்மையென ஏற்கவும் அல்லது பொய்யென மறுக்கவும் செய்யலாம்.


"கடவுள்" - என்ற நிலையை இஸ்லாம் அல்லாத மற்ற மதங்கள் யாவும் மேற்கண்ட நிலைப்பாட்டிலேயே வைத்து காண்கிறது. ஆகவேதான் கடவுள் குறித்த விமர்சனங்களுக்கு அங்கு பதில் தருவதில்லை என்பதைவிட பதில் இல்லையென அறிந்து கடவுள் மறுப்புக்குப் பலர் ஆளாகின்றனர். ஆக, கடவுள் மறுப்புக் கொள்கைக்கு இஸ்லாம் அல்லாத ஏனைய மதங்களின் தவறான கடவுள் சார்ந்த கோட்பாடே பிரதான காரணம் என்றால் அது மிகையாகாது. ஆக, இஸ்லாம் கூறும் கடவுள் குறித்த வரைவிலக்கணம் பகுத்தறிவிற்குப் பொருத்தமானதா? என்பதை பார்க்கும் முன் கடவுளை மறுக்கும் நாத்திகச் சிந்தனை பகுத்தறிவிற்கு உகந்ததா... பார்ப்போம்.

நாத்திகம்
பொதுவாக ஒருவரின் நாத்திகச் சிந்தனைக்கு அடிப்படைக் காரணம் தேடுதலில் விருப்பங்கொண்ட அவரின் சுய அறிவு. அது பாராட்டத்தக்கதே..! எனினும்., அவ்வறிவால் தம்மைச் சுற்றி நடைபெறும் கடவுள் பெயரால் அரங்கேறும் போலி வழிபாடுகளும் அனாச்சாரங்களும் அறிவிற்குப் பொருந்தாத மூடப் பழக்க வழக்கங்களும், மிக முக்கியமாக கடவுள் பெயரால் நடைபெறும் சமூகப் புறக்கணிப்பும்தான் ஒருவரது கடவுள் மறுப்புகொள்கைக்கு மிக முக்கியக் காரணியாகிறது.. இன்னும் சற்று ஆழமாக அதன் வெளிபாட்டை இஸ்லாத்திலும் காண்பிக்க குர்ஆன் மற்றும் ஹதிஸ்களுக்குத் தவறான புரிதலோடு தங்களின் சுய விளக்கத்தை அளித்து, கடவுள் மறுப்புக்கு மேலும் மெருகேற்றுகிறார்கள். எனினும் அதற்கு நமது (இணைய) சகோதரங்கள் பலரால் தெளிவாக மறுப்பும் விளக்கமும் தரப்படுகிறது, அல்ஹம்துலில்லாஹ்..!

இங்கு கவனிக்கத்தக்க ஒரு விசயம் ... கடவுளை மறுக்க கடவுள் பெயரால் ஏற்படும் தவறுகளை முன்னிருத்தி மட்டுமே கடவுள் மறுப்புக்குச் சான்று தரப்படுகிறது. மாறாக, நேரடியாக கடவுள் இல்லையென மறுக்கத் தெளிவான காரணம் இல்லை.

"பரிணாமக் கொள்கை" அறிவியல் ரீதியாகக் கடவுள் மறுப்புக்கு மாபெரும் ஆயுதமாகக் கொண்டாலும் அதுவும் பயனற்றுதான் போகும். ஏனெனில் இதுவரை நிகழ்வுற்ற பரிணாம கோட்பாடுகளை ஒருவேளை உண்மையென நம்பினாலும்(?)கூட "ஏற்பட்ட உயிரின மாற்றத்தைப் பற்றித்தான் பரிணாமம் பேசுகிறதே தவிர அஃது உயிரினங்கள் ஏன் மாற்றமடைந்தன என்பதற்கு தகுந்த சான்றின்றி இன்னும் கேள்விக்குறியோடுதான் ஆய்வைத் தொடர்வதாக அறிவியலார் பதில் தருகின்றனர்.

ஆக, அறிவியல் ரீதியாகக் கடவுளை மறுக்க பரிணாமம் துணைக்கு வராது. சுருங்கக்கூறினால், "எதுவுமல்லாத சூன்யத்திலுருந்து ஓர் உயிரை அறிவியலார் உண்டாக்கினால் மட்டுமே விஞ்ஞானத்தால் கடவுள் இல்லை என்பதை ஆணித்தரமாக மறுக்க முடியும். அதுவரை கடவுளை மறுக்கத் தர்க்கரீதியான வழிகளைத்தான் தேட வேண்டும். எனினும் பகுத்தறிவுப் பார்வையில் அதுவும் சாத்தியமா என்றால்... இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்..

எந்த ஒன்றை மறுப்பதும், ஏற்பதும் அவரவர் உரிமை. அதேநேரத்தில் பொதுவில் அறுதியிட்டுக் கூறும் தம் வாதத்தை மெய்ப்பிப்பதாக இருந்தால் அதற்கான சான்றுகளை தருவது அவரது கடமையாகும். இதுவே ஒரு செயல், ஒரு தன்மை அல்லது ஒரு நிகழ்வை உண்மைப்படுத்தலின் வரைவிலக்கணம் ஆகும்.

இதனடிப்படையில் கடவுள் குறித்த நிகழ்வைப் பொதுவில் நிறுத்தி ஏற்பதாக இருந்தாலும் மறுப்பதாக இருந்தாலும் அதற்கான வரைவிலக்கணம் தெளிவாக முன்னிருத்தப்பட வேண்டும். அஃதில்லாமல் கூறும் வாதங்கள் நம்பிக்கை சார்ந்த அளவில் மட்டுமே பார்க்கப்படும். இந்நேரத்தில் கடவுள் குறித்த வரைவிலக்கணம் குறித்துப் பார்க்கும்போது சகோ ஜாகிர் நாயக் அவர்களின் அழகிய எளிய உதாரணத்தையும் இங்குக் குறிப்பிடுவது அவசியம் என நினைக்கிறேன்.

"என் கையில் ஒரு பேனாவை வைத்துக்கொண்டு இது ஒரு புத்தகம் என்று நான் கூறினால் இதனை ஒருவர் மறுப்பதாக இருந்தால் கண்டிப்பாக அவருக்குப் பேனாவைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். பேனாவைப் பற்றி தெரியாவிட்டாலும் புத்தகத்தைப்பற்றிக் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும். அப்போதுதான் நான் கையில் வைத்திருப்பது புத்தகம் இல்லை என அவரால் கூற இயலும்" என அவர் கூறினார்.

மேற்கண்ட கேள்வி எதிர் மறையாக இருப்பதால் விடைக்கான இரு பொருட்களில் ஒன்றை மட்டும் நாம் அறிந்திருந்தாலே போதுமானது. மற்றொரு பொருள் குறித்து அறியாமாலிருந்தாலும் நமது நிலைப்பாட்டை உண்மையாக்கலாம். இப்படித்தான் மேற்கண்ட நாத்திகச் சிந்தனை, கடவுளுக்கான கேள்விக்கு எதிர்மறை விளக்கத்தைக் கையாளுகிறது.

ஆனால் இதே கேள்வி நேர்மறையாக கேட்கப்பட்டால்..!
என் கையில் ஒரு பொருளை வைத்துக் கொண்டு அதைப் பிறர் முன்னிலையில் காட்டி இது பேனா என்கிறேன். இதை ஒருவர் மறுப்பதாக இருந்தால் பேனாவைத் தவிர மற்ற எல்லாப் பொருட்களின் வரைவிலக்கணம் குறித்துத் தெரிந்திருந்தாலும் இக்கேள்விக்கு அவரால் பதில் சொல்ல முடியாது. மாறாக பேனாவின் வரைவிலக்கணம் தெரிந்திருந்தால் மட்டுமே உண்மையான பதில் தருவது சாத்தியம்.

ஆக, இந்த உதாரணத்தை மேற்கோளாகக் கொண்டு கடவுள் குறித்த வரைவிலக்கணத்தோடு ஒப்புநோக்கும்போது கடவுளை ஏற்பதாகவோ அல்லது மறுப்பதாகவோ இருந்தால் அவருக்குக் கடவுள் குறித்த வரைவிலக்கணம் கண்டிப்பாகப் தெரிந்திருக்க வேண்டும் அப்போது மட்டுமே இக்கேள்விக்கு உண்மையான பதில் தர இயலும்.

மிகத் தெளிவாக, எளிதாக,

(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் என்பவன் ஒருவனே (112:1).
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன் (112:2).
அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை (112:3).
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை (112:4).

இப்படி குர்ஆனில் கடவுளுக்கு இஸ்லாம் வரைவிலக்கணம் தருகிறது. இவ்வரிகளை நம்பிக்கை என்ற அளவுகோலையும் தாண்டி மனித அறிவு ஏற்றுக்கொள்ளும் வாதமாகவும், அதேநேரத்தில் மனித எண்ணங்களால் வரையறுக்க இயலாத ஓர் உயரிய சக்திக்குப் பொருந்தும்படியான முறையான செய்கைகளும் இருப்பதால் மேற்கண்ட வரைவிலக்கணத்தை ஏற்றுக்கொள்வதில் பகுத்தறிவாளர்களுக்கு எந்தவித ஆட்சபனையும் இருக்கக்கூடாது.

கடவுளுக்கான ஓர் உயரிய வரைவிலக்கணத்தை முன்னிருத்தி, இஃது உண்மையானது என குர்ஆன் கூறும் போது, மேற்கண்ட கோட்பாட்டைப் பொய்யென மறுப்பதாக இருந்தால் அவ்வாறு தாங்கள் மறுக்கும் கடவுளுக்கு உண்மையான வரைவிலக்கணத்தை நாத்திகச் சிந்தனையாளர்கள் தரவேண்டும். ஆனால் இன்றுவரை தாங்கள் மறுக்கும் கடவுளுக்கு உண்டான வரைவிலக்கணத்தை நாத்திகச் சிந்தனை தரவே இல்லை. இது ஆச்சரியமான விஷயமும்கூட.

ஏனெனில், கடவுள் குறித்த நிலைப்பாட்டை ஏனைய மதங்கள் நம்பிக்கை சார்ந்த விசயமாக அணுகி கொண்டிருக்க... இஸ்லாம் மட்டுமே எப்படிப்பட்டவர் கடவுளாக இருக்க முடியும் அல்லது இருக்க வேண்டும் எனக் கடவுள் குறித்து ஒரு தெளிவான வரைவிலக்கணத்தை ஏற்படுத்தித் தந்திருக்கிறது எனும்போது எதையும் நம்பிக்கை கடந்து பகுத்தறிவுக் கண் கொண்டு ஆராயும் நாத்திகம், கடவுள் இல்லை என்பதை நிருபிக்க எப்படிப்பட்டவர் கடவுளாக இருக்கமுடியாது? ஏன் கடவுளாக இருக்க முடியாது? என்பதற்கு ஒரு வரைவிலக்கணம் நாத்திகம் உருவான முதல்நாளே இயற்றி இருக்கவேண்டுமல்லவா? இதுவரைக்கும் அப்படி ஒரு வரைவிலக்கணத்தை நாத்திகம் ஏற்படுத்தாதது மிகப்பெரிய கேள்விக்குறியே..! இனி ஏற்படுத்த முனைந்தாலும் மதங்கள் வணங்கும் போலிக் கடவுளர்களைத்தான் தங்கள் மறுப்புக்குரிய கடவுளர்களாக நாத்திகர்கள் இனங்காட்ட முடியும்.

போலிக் கடவுளர்களை மறுப்பதற்குப் பெயர்தான் நாத்திகச் சிந்தனையென்றால்... நாங்களும் அத்தகையப் போலிக் கடவுளர்களை இல்லை என்றுதான் சொல்வோம்.

பகுத்தறிவு விதையில் மலர்ந்தது நாத்திகப்பூவென்றால் இனிமேலாவது நாத்திகம் மறுக்கும் கடவுளுக்கு ஒரு வரைவிலக்கணம் தரட்டும். அதுவரை கடவுள் மறுப்பாளர்கள் என தங்களைச் சொல்ல வேண்டாம். வேண்டுமானால் கடவுள் எதிர்ப்பாளர்கள் என்று - அதுவும் மதங்கள் சமைத்த போலிக் கடவுள்களின் எதிர்ப்பாளர்கள் என்று தங்களை சமூகங்களில் அடையாளப் படுத்தட்டும். உங்களின் அறிவுச் சிந்தனைக்கு ஆணவ திரையிட வேண்டாம் என்பதே இப்பதிவின் நோக்கம் நாத்திகச் சகோதரங்களே!


nandri: sathyamarkam

Tuesday, October 18, 2011

தொழுகையைக் கடைப் பிடியுங்கள்

‎2:43. தொழுகையைக் கடைப் பிடியுங்கள்; ஜகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள் ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள். பாகம் 3, அத்தியாயம் 52, எண் 2689 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" (தொழுகை அழைப்பான) பாங்கு சொல்வதிலும் (கூட்டுத் தொழுகையில்) முதல் வரிசையிலும் இருக்கும் நன்மையை மக்கள் அறிவார்களாயின் (அதை அடைந்து கொள்ள) சீட்டுக் குலுக்கிப் போடுவதைத் தவிர வேறு ...வழியில்லாமல் போகுமானால் நிச்சயம் சீட்டுக் குலுக்கிப் போடுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போகுமானால் நிச்சயம் சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். தொழுகைக்கு அதன் ஆரம்ப வேளையில் விரைந்து செல்வதில் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின் அதற்கு முந்திக் கொள்வார்கள். இஷா தொழுகையிலும். ஃபஜ்ருத் தொழுகையிலும் உள்ள நன்மையை அவர்கள் அறிவார்களாயின் அதற்குத் (தரையில்) தவழ்ந்தாவது அவர்கள் வந்து விடுவார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். பாகம் 1, அத்தியாயம் 8, எண் 477 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். "ஒருவர் தன்னுடைய வீட்டில் தொழுவதை விடவும் கடை வீதியில் தொழுவதை விடவும் ஜமாஅத்துடன் தொழுவது இருபத்தி ஐந்து மடங்கு மதிப்பில் அதிகமானதாகும். உங்களில் ஒருவர் உளூச் செய்து, அதை அழகுறச் செய்து, தொழுகிற ஒரே நோக்கத்தில் பள்ளிவாசலுக்கு வந்தால் அவர் பள்ளிவாசலுக்கு வரும் வரை எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் அவருக்குப் படித்தரத்தை அல்லாஹ் உயர்த்துகிறான்; ஒரு பாவத்தை அவரைவிட்டு நீக்குகிறான். தொழுகையை எதிர் பார்த்து அவர் பள்ளிவாசலில் அமர்ந்திருக்கும்போது அவர் தொழுது கொண்டிருப்பவராகவே கருதப் படுகிறார். தொழுத இடத்திலேயே அவர் இருக்கும் வரை அவருக்காக வானவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். சிறு தொடக்கு மூலம் வானவர்களுக்கத் தொல்லை அளிக்காத வரையில் 'இறைவா! இவரை மன்னித்து விடு! இறைவா இவருக்கு அருள் புரி!' என்று வானவர்கள் கூறுகின்றனர்." என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். பாகம் 1, அத்தியாயம் 10, எண் 635 அபூ கதாதா(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் சிலர் வேகமாக வரும் சப்தத்தைச் செவியுற்றார்கள். தொழுகையை முடித்ததும் 'உங்களுக்கு என்ன? (இவ்வளவு வேகமாக வந்தீர்கள்)" என்று அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு '(ஜமாஅத்) தொழுகைக்காக விரைந்து வந்தோம்' என்று பதில் கூறினர். 'அவ்வாறு செய்யாதீர்கள். தொழுகைக்கு வரும்போது அமைதியான முறையில் வாருங்கள். உங்களுக்குக் கிடைத்த ரக்அத்தை ஜமாஅத்துடன் தொழுங்கள். உங்களுக்குத் தவறிப் போனதைப் பூர்த்தி செய்யுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அஸ்ஸலாமு அலைக்கும் சகோதர சகோதரிகளே.....

Tuesday, June 28, 2011

மெஹ்ராஜ் (விண்ணுலக பயணம்)

(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான்.[17:1]

வசனத்தில் அல்லாஹ் மாநபி [ஸல்] அவர்களின் விண்ணுலக பயணத்தை மேற்கோள் காட்டி, அந்த பயணம் 'நம்முடைய அத்தாட்சிகளை அவருக்கு காண்பிப்பதற்காக' என்று சொல்லிக்காட்டுகிறான். நபி[ஸல்] அவர்களின் இந்த பயணம் விரிவான செய்திகளை அடக்கியது எனவே, அதை சுருக்கமாக பார்த்துவிட்டு இந்த பயணத்தின் மூலம் முஸ்லிம்கள் பெற வேண்டிய படிப்பினைகளை விரிவாக பார்ப்போம்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" நான் இறையில்லம் கஅபாவில் இருமனிதர்களுக்கிடையே (பாதி) தூக்கமாகவும் (பாதி) விழிப்பாகவும் இருந்தபோது நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்ட தங்கத் தட்டு ஒன்று என்னிடம் கொண்டு வரப்பட்டது. என்னுடைய நெஞ்சம் காறையெலும்பிலிருந்து அடி வயிறு வரை பிளக்கப்பட்டது. பிறகு ஸம்ஸம் நீரினால் என் வயிறு கழுவப்பட்டது. பிறகு, (என் இதயம்) நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்டது. மேலும், கோவேறுக் கழுதையை விடச் சிறியதும் கழுதையை விடப் பெரியதுமான 'புராக்' என்னும் (மின்னல் வேக) வாகனம் ஒன்றும் என்னிடம் கொண்டு வரப்பட்டது. நான் (அதில் ஏறி) ஜிப்ரீல்(அலை) அவர்களுடன் சென்றேன்.

நாங்கள் முதல் வானத்தை அடைந்தோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல்(அலை), 'ஜிப்ரீல்" என்று பதிலளித்தார். 'உங்களுடன் (வந்திருப்பவர்) யார்?' என்று கேட்கப்பட்டது. அவர், 'முஹம்மது" என்று பதிலளித்தார். 'அவரை அழைத்து வரச் சொல்லி ஆள் அனுப்பப்பட்டிருந்ததா?' என்று கேட்கப்பட்டது. அவர், 'ஆம்" என்றார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும்! அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நான் ஆதம்(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள், '(என்) மகனும் இறைத் தூதருமான உங்கள் வரவு நல்வரவாகுக!" என்றார்கள்.

பிறகு இரண்டாவது வானத்திற்கு நாங்கள் சென்றோம். 'யார் அது?' என்று வினவப்பட்டது. அவர், 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்க, 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'முஹம்மது" என்று பதிலளித்தார். '(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'ஆம்" என்று பதிலளித்தார். 'அவரின் அவரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்லவருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நான், ஈஸா(அலை) அவர்களிடமும் யஹ்யா(அலை) அவர்களிடமும் சென்றேன். அவ்விருவரும், 'சகோதரரும் நபியுமாகிய உங்களின் வரவு நல்வரவாகட்டும்" என்றார்கள்.

பிறகு, நாங்கள் மூன்றாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்கப்பட்டது. 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. 'முஹம்மத்" என்று பதிலளித்தார். '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்" பதிலளித்தார். '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்" என்று பதிலளித்தார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு, நான் யூசுஃப் (அலை) அவர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டேன். அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று (வாழ்த்து) சொன்னார்கள்.

பிறகு, நாங்கள் நான்காவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளித்தார். 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று பதிலளிக்கப்பட்டது. '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்" என்று பதிலளித்தார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. நான் இத்ரீஸ்(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று (வாழ்த்து) சொன்னார்கள்.

பிறகு, நாங்கள் ஐந்தாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்கப்பட்டது. 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. 'முஹம்மத்" என்று பதிலளிக்கப்பட்டது. '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்" என்று (ஜிப்ரீல்) பதிலளித்தார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்லவருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நாங்கள் ஹாரூன்(அலை) அவர்களிடம் சென்றோம். நான் அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று (வாழ்த்து) சொன்னார்.

பிறகு நாங்கள் ஆறாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்கப்பட்டது. 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. 'முஹம்மத்" என்று பதிலளிக்கப்பட்டது. '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்" என்று பதிலளிக்கப்பட்டது. 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) சலாம் உரைத்தேன். அவர்கள், 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று வாழ்த்தினார்கள். நான் அவர்களைக் கடந்து சென்றபோது அவர்கள் அழுதார்கள். 'நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?' என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர், 'இறைவா! என் சமுதாயத்தினரில் சொர்க்கம் புகுபவர்களை விட அதிகமானவர்கள் எனக்குப் பிறகு அனுப்பப்பட்ட இந்த இளைஞரின் சமுதாயத்தினரிலிருந்து சொர்க்கம் புகுவார்கள்" என்று பதிலளித்தார்கள்.

பிறகு நாங்கள் ஏழாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று வினவப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்கப்பட்டது. 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. 'முஹம்மத்" என்று பதிலளிக்கப்பட்டது. '(அவரை அழைத்து வரச்சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது... நான் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) சலாம் உரைத்தேன். அவர்கள், 'மகனும் நபியுமான உங்கள் வரவு நல்வராவாகட்டும்" என்றார்கள்.

பிறகு, 'அல் பைத்துல் மஃமூர்' எனும் 'வளமான இறையில்லம்' எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. நான் அதைக் குறித்து ஜிப்ரீலிடம் கேட்டேன். அவர், 'இதுதான் 'அல் பைத்துல் மஃமூர்' ஆகும். இதில் ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் வானவர்கள் தொழுகிறார்கள். அவர்கள் இதிலிருந்து வெளியே சென்றால் திரும்ப இதனிடம் வர மாட்டார்கள். அதுவே அவர்கள் கடைசியாக நுழைந்ததாம் விடும்" என்றார். பிறகு, (வான எல்லையிலுள்ள இலந்தை மரமான) 'சித்ரத்துல் முன்தஹா' எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. அதன் பழங்கள் (யமனில் உள்ள) 'ஹஜ்ர்' எனுமிடத்தின் (உற்பத்திப் பொருளான மண்) கூஜாக்கள் போல் இருந்தன. அதன் இலைகள் யானைகளின் காதுகளைப் போல் இருந்தன. அதன் வேர்ப்பகுதியில் நான்கு ஆறுகள் இருந்தன. (ஸல்ஸபீல், கவ்ஸர் ஆகிய) இரண்டு ஆறுகள் உள்ளே இருந்தன. மற்றும் (யூப்ரடீஸ், நைல் ஆகிய) இரண்டு ஆறுகள் வெளியே இருந்தன. நான் ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் அவற்றைக் குறித்துக் கேட்டேன். அவர்கள், 'உள்ளேயிருப்பவை இரண்டும் சொர்க்கத்தில் உள்ளவையாகும். வெளியே இருப்பவை இரண்டும் நைல் நதியும் யூப்ரடீஸ் நதியும் ஆகும்" என்று பதிலளித்தார்கள். பிறகு என் மீது ஐம்பது (நேரத்) தொழுகைகள் கடமையாக்கப்பட்டன. நான் முன்னேறிச் சென்று இறுதியில் மூஸா(அலை) அவர்களை அடைந்தேன். அவர்கள், 'என்ன செய்தாய்?' என்று கேட்டார்கள். நான், 'என் மீது ஐம்பது தொழுகைகள் கடமையாக்கப்பட்டுள்ளன" என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், 'எனக்கு மக்களைப் பற்றி உங்களை விட அதிகமாகத் தெரியும். நான் பனூ இஸ்ராயீல்களுடன் பழம் நன்கு அனுபவப்பட்டுள்ளேன். உங்கள் சமுதாயத்தினர் (இதைத்) தாங்க மாட்டார்கள். எனவே, உங்களுடைய இறைவனிடம் திரும்பிச் சென்று அவனிடம் (தொழுகைகளின் எண்ணிக்கையைக்) குறைத்துத் தரும்படி கேளுங்கள்" என்றார்கள். நான் திரும்பச் சென்று இறைவனிடம் (அவ்வாறே) கேட்டேன். அதை அவன் நாற்பதாக ஆக்கினான். பிறகும் முதலில் சொன்னவாறே நடந்தது. மீண்டும் (சென்று நான் கேட்க, இறைவன் அதை) முப்பதாக ஆக்கினான். மீண்டும் அதைப் போன்றே நடக்க (அதை) இறைவன் இருபதாக ஆக்கினான். நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்றபோது அவர்கள் முன்பு போன்றே சொல்ல (நான் இறைவனிடம் மீண்டும் குறைத்துக் கேட்க) அவன் அதை ஐந்தாக ஆக்கினான். பிறகு நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்கள், 'என்ன செய்தாய்?' என்று கேட்க, 'அதை இறைவன் ஐந்தாக ஆக்கிவிட்டான்" என்றேன். அதற்கு அவர்கள், 'முன்பு சொன்னதைப் போன்றே (இன்னும் குறைத்துக் கேட்கும்படி) சொன்னார்கள். அதற்கு, 'நான் (இந்த எண்ணிக்கைக்கு) ஒப்புக் கொண்டேன்" என்று பதிலளித்தேன். அப்போது (அல்லாஹ்வின் தரப்பிலிருந்து அசரீரியாக), 'நான் என் (ஐந்து வேளைத் தொழுகை எனும்) விதியை அமல்படுத்தி விட்டேன். என் அடியார்களுக்கு (ஐம்பது வேளைகளிலிருந்து ஐந்து வேளையாகக் குறைத்து கடமையை) லேசாக்கி விட்டேன். ஒரு நற்செயலுக்குப் பத்து நன்மைகளை நான் வழங்குவேன்" என்று அறிவிக்கப்பட்டது. [நூல்;புஹாரி எண் 3207 ]

முஸ்லிமில் இடம்பெற்றுள்ள ஹதீஸில் காபாவில் இருந்து பைத்துல் முகத்தஸ் சென்ற விபரங்கள் கூடுதலாக கிடைக்கின்றன.
எனது விண்ணேற்றப் பயணத்திற்காக) நாட்டுக்கழுதைக்கும் கோவேறுக்கழுதைக்கும் இடைப்பட்ட உருவத்தில், வெள்ளை நிறமுடைய, பார்வை எட்டுகிற தூரத்திற்குத் தனது காலைத் தூக்கி ஓர் எட்டு வைக்கும், 'புராக்' எனும் உயரமான ஒரு (மின்னல் வேக) வாகனம் அளிக்கப் பட்டேன். அதிலேறி நான் (ஜெரூசலேத்திலுள்ள இறையாலயம்) பைத்துல் மக்திஸ்வரை சென்றேன். பிறகு இறைத்தூதர்கள் தமது வாகனத்தைக் கட்டி வைக்கும் வளையத்தில் எனது வாகனத்தைக் கட்டி வைத்து விட்டு, அந்த இறையாலத்திற்குள் நுழைந்து இரண்டு ரக்அத்கள் தொழுதேன். பிறகு நான் அங்கிருந்து புறப்படும்போது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் (என்னிடம்) ஒரு பாத்திரத்தில் மதுவும் மற்றொரு பாத்திரத்தில் பாலும் (எனக்காகக்) கொண்டு வந்தார். நான் பாலைத் தேர்ந்தெடுத்தபோது, "இயற்கையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டீர்" என்று ஜிப்ரீல் கூறினார். [முஸ்லிம்]

இந்த பொன்மொழியிலிருந்து அறியவேண்டியவைகள்;

1. ஒவ்வொரு வானத்திற்கும் பிரத்தியேகமான காவலர்களை[வானவர்களை] அல்லாஹ் நியமித்துள்ளான்.
2. அல்லாஹ்வால் அழைக்கப்பட்டவர் மட்டுமே வின்னிற்குள் நுழையமுடியும். 3. ஒவ்வொரு வானத்திலும் நபிமார்களை நபி[ஸல்] அவர்கள் சந்தித்துள்ளார்கள்.
4. அல்-பைத்துல் மஃமூர் [பூமியில் புனித பள்ளியாக காஃபா இருப்பதுபோல்] வானத்தில் உள்ள புனித பள்ளியாகும். இங்கு வானவர்கள் மட்டுமே தொழுவார்கள். ஒருமுறை தொழும் வானவர்களின் எண்ணிக்கை 70 ,000 பேர் ஆகும். ஒரு முறை அங்கு வணங்கியவர்கள் மீண்டும் வரமாட்டார்கள்.
5. ஒரு முறை தொழும் வானவர் 70 ,000 பேர். அவர்கள் மீண்டும் அங்கு வரமாட்டார்கள் எனில், அல்லாஹ் கணக்கிலடங்கா வானவர்களை படைத்திருக்க கூடும்.

படிப்பினைகள்;அல்லாஹ் தன் அடியார்களுக்கு ஆரம்பமாக ஐம்பது நேர தொழுகையை கடமையாக்கினான். பின்பு நபி மூஸா[அலை] அவர்களின் அறிவுரையின் பேரில், நபி[ஸல்] அவர்கள் அல்லாஹ்விடம் கெஞ்சியதன் பயனாக அல்லாஹ் ஐந்து நேரமாக குறைத்ததோடு, ஒரு நற் செயலுக்கு பத்து மடங்கு கூலியை வழங்குவதாக அறிவித்துவிட்டான். இந்த அடிப்படையில் நாம் முறையாக, உரிய நேரத்தில் ஐவேளை தொழுகையை நிறைவேற்றினால் அல்லாஹ் ஐம்பது நேரம் நாம் தொழுத நன்மையை பதிவு செய்வான். இத்தகைய சிறப்பு வாய்ந்த தொழுகையை இன்று முஸ்லீம் சமுதாயத்தில் பெரும்பாலோர் பாழடித்து வருவதையும், வெள்ளிக்கிழமை அல்லது பெருநாள் மட்டும் தொழுபவர்களாகவும் இருப்பதை பார்க்கிறோம். அல்லாஹ் நம்மீது கருணை காட்டிஐம்பதை மாற்றி ஐந்தாக தந்தானே, அதற்கு நன்றி செலுத்தும் வகையில் நாம் ஐவேளை தொழுபவர்களாகவும், சுன்னத்தான-நபிலான தொழுகையை நிறைவேற்றுபவர்ஆகவும் நாம் மாறவேண்டும்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" நான் (மிஅராஜ் - விண்ணுலகப் பயணத்தின் போது) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன். நரகத்தையும் எட்டிப் பார்த்தேன். அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாக பெண்களைக் கண்டேன். [நூல்;புஹாரி எண் 3241 ]

படிப்பினைகள்; எழ்மை நிலையில் இருக்கும் நம்மில் சிலர், 'என்ன வாழ்க்கை இது; அல்லாஹ்வை நாம் அனுதினமும் வணங்கி வரும் நமக்கு ஏன் இந்த கஷ்ட நிலையோ' என்று அங்கலாய்ப்பதை பார்க்கிறோம். எழ்மைநிலையில் இருப்பவர்கள் வருந்தவேண்டியதில்லை. ஏனெனில் நிரந்தர சொர்க்கத்தில் அதிகமாக பிரவேசிக்கப்போவது ஏழைகள்தான் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

பெண்கள் அதிகமாக நரகம் செல்லக்காரணம் என்ன? மற்றொரு நபி மொழி நமக்கு தெளிவாக்குகிறது.'ஹஜ்ஜுப் பெருநாளன்றோ நோன்புப் பெருநாளன்றோ தொழும் திடலிற்கு நபி(ஸல்) அவர்கள் சென்று கொண்டிருந்தபோது சில பெண்களுக்கு அருகே அவர்கள் சென்று, 'பெண்கள் சமூகமே! தர்மம் செய்யுங்கள்! ஏனெனில், நரக வாசிகளில் அதிகமாக இருப்பது நீங்களே என எனக்குக் காட்டப்பட்டது' என்று கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! ஏன்' என்று அப்பெண்கள் கேட்டதற்கு, 'நீங்கள் அதிகமாகச் சாபமிடுகிறீர்கள்; கணவனுக்கு நன்றி கெட்டவர்களாக இருக்கிறீர்கள்; மார்க்கக் கடமையும் அறிவும் குறைந்தவர்களாக இருந்து கொண்டு மன உறுதியான கணவனின் புத்தியை மாற்றி விடக்கூடியவர்களாக உங்களை விட வேறு யாரையும் நான் காணவில்லை' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது 'இறைத்தூதர் அவர்களே! எங்களுடைய மார்க்கக் கடமையும் எங்களுடைய அறிவும் எந்த அடிப்படையில் குறைவாக உள்ளன' என்று பெண்கள் கேட்டனர். 'ஒரு பெண்ணின் சாட்சி ஓர் ஆணின் சாட்சியில் பாதியாகக் கருதப்படவில்லையா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டததற்கு, 'ஆம்' என அப்பெண்கள் பதில் கூறினர். 'அதுதான் அவர்கள் அறிவு குன்றியவர்கள் என்பதைக் காட்டுகிறது; ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தொழுகையையும் நோன்பையும்விட்டு விடுவதில்லையா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டதற்கும் 'ஆம்!' எனப் பெண்கள் பதில் கூறினர். 'அதுதான் பெண்கள் மார்க்கக் கடமையில் குறைவானவர்களாக இருக்கின்றனர் என்பதற்கு ஆதாரமாகும்" என்று நபி(ஸல்) கூறினார்கள்" என அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார். [நூல்;புஹாரி எண் 304 ]

இந்த நபிமொழியில் பெண்கள் நரகம் செல்லும் காரணியாக மூன்று செயல்களை நபி[ஸல்] அவர்கள் அறிவிக்கிறார்கள் இந்த மூன்று செயல்களும் இருக்கும் பெண்கள் அதை மாற்ற முன்வரவேண்டும்.

மகத்துவமும், கண்ணியமும் நிறைந்த இறைவன் என்னை மிஃராஜுக்கு அழைத்துச் சென்ற போது நான் ஒரு சமுதாயத்தைக் கடந்து சென்றேன். அவர்களுக்கு செம்பினால் நகங்கள் இருந்தன. (அவற்றால்) தங்கள் முகங்களையும், மார்புகளையும் அவர்கள் காயப்படுத்திக் கொண்டிருந்தனர். ""ஜிப்ரீலே! இவர்கள் யார்?'' என்று நான் கேட்டேன். ""இவர்கள் (புறம் பேசி) மக்களின் இறைச்சி சாப்பிட்டு, அவர்களின் தன்மான உணர்வுகளைக் காயப்படுத்திக் கொண்டிருந்தவர்கள்'' என்று பதிலளித்தார்கள்.
நூல்கள்: அபூதாவூத் 4235, அஹ்மத் 12861
படிப்பினைகள்;புறம் பேசுவதை சர்வசாதரனாக செய்து கொண்டிருக்கிறோம். இதில் விதிவிலக்கானவர்கள் 'மைக்ரோ பாய்ண்ட்'அளவே தேறுவர். இந்த மாபாதக செயலுக்கும்மறுமையில் கிடைக்கும் தண்டனையைத்தான் மேற்கண்ட நபி மொழி விளக்குகிறது. இனியேனும் திருந்துவோமாக!

அல்லாஹ் நபி[ஸல்] அவர்களுக்கு 'அல்கவ்ஸர்' எனும் தடாகத்தை மறுமையில் வழங்குவான். அந்த அல்-கவ்ஸர் பற்றி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' ('அல்கவ்ஸர்' எனும்) என் தடாகம் ஒரு மாத காலப் பயணத் தொலைதூரம் (பரப்பளவு) கொண்டதாகும். அதன் நீர் பாலை விட வெண்மையானது. அதன் மணம் கஸ்தூரியை விட நறுமணம் வாய்ந்தது. அதன் கூஜாக்கள் விண்மீன்கள் போன்றவை. யார் அதன் நீரை அருந்துகிறார்களோ அவர்கள் ஒருபோதும் தாகமடையமாட்டார்கள். நூல்;புஹாரி ]

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த தடாகத்தில் நபி[ஸல்] அவர்களின் உம்மத்தினர் அனைவரும் நீரருந்திவிடமுடியுமா எனில் சிலர் தடுக்கப்படுவார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' நான் (மறுமை நாளில் 'அல்கவ்ஸர்' எனும்) என்னுடைய தடாகத்தின் அருகே இருந்தவாறு என்னிடம் வருகிறவர்களை எதிர்பார்த்துக் காத்திருப்பேன். அப்போது என்னை நெருங்கிவிடாமல் சிலர் பிடிக்கப்படுவார்கள். அப்போது நான் '(இவர்கள்) என் சமுதாயத்தார்' என்பேன். அதற்கு 'உங்களுக்குத் தெரியாது. (நீங்கள் உலகைவிட்டுப் பிரிந்த பின்னால்) இவர்கள் வந்தவழியே அப்படியே திரும்பிச் சென்றார்கள்' என்று கூறப்படும்.[நூல்;புஹாரி எண் 7048 ]

இந்த பொன்மொழியில் வந்தவழியே திரும்பி சென்றவர்கள் தடாகத்திற்கு நீரருந்த வரமுடியாது. நபியவர்களின் திருக்கரத்தால் நீரருந்தும் பாக்கியம் அவர்களுக்கு கிட்டாது. திரும்ப செல்லுதல், என்றால் மதம் மாறுவது மட்டும் என்று பொருளல்ல. மாறாக இஸ்லாத்திற்கு வருவதற்கு முன்னால், நாம் செய்து கொண்டிருந்த எந்த ஒரு தீய செயலையும் இஸ்லாத்திற்கு வந்த பின்னும் தொடர்ந்தால் அதுவும் வந்தவழியே செல்வதாகும். உதாரணத்திற்கு இஸ்லாத்தில் அல்லாஹ்வை தவிர வேறு எவரிடமும் உதவிதேடக்கூடாது என்பது சட்டம். ஆனால் முஸ்லிம்களில் சிலர் தர்காக்களில் மண்ணோடு மண்ணாக மக்கிப்போனவர்களிடம் பல்வேறு உதவிகளை தேடுகின்றனர். அதோடு இஸ்லாத்தில் சடங்கு சம்பிரதாயம் எதுவும் இல்லை. ஆனால் முஸ்லிம்களில் சிலர் ஒரு குழந்தை பிறப்பது முதல் அக்குழந்தை வளர்ந்து வாலிபனாகி, முதுமையடைந்து இறப்பதுவரை ஏன் இறந்த பின்னும் எண்ணற்ற சடங்கு சம்பிரதாயங்களை செய்வதை காணலாம். இதுபோன்ற செயல்கள் வந்த வழியே திரும்பி செல்வதாகும். எனவே மார்க்கம் நபி[ஸல்] அவர்களோடு முற்று பெற்று விட்டது. நபி[ஸல்] அவர்களுக்கு பின்னால் எவர் எதை சொன்னாலும் அது குர்ஆண்- ஹதீஸுக்கு முரணாக இருந்தால் தூக்கி எறிந்து விட்டு குர்ஆண்- ஹதீஸை மட்டும் பின்பற்ற அமுல்படுத்த முஸ்லிம்கள் முன்வரவேண்டும். அப்போதுதான் தடாகம் நீரும் கிடைக்கும்-தடையின்றி சொர்க்கம் செல்லவும் முடியும்.

எல்லாம் வல்ல அல்லாஹ், நபி[ஸல்] அவர்களின் விண்ணுலக பயணத்தை எந்த படிப்பினைக்காக ஆக்கினானோ அதை புரிந்து அமல் செய்யக்கூடியவர்களாக நம்மை ஆக்கியருள்வானாக!

நன்றி: முகவை அப்பாஸ்

Wednesday, December 15, 2010

படைப்பாளனின் இறுதிவேதம்!

படைப்பாளன் நீங்களா? இறைவனா? உங்களைப் படைப்பவன் அல்லாஹ்வே!

அகிலங்களின் இறைவனான அல்லாஹ் கூறுகிறான்:நாமே உங்களைப் படைத்தோம். எனவே, (நாம் கூறுவதை) நீங்கள் உண்மையென்று நம்ப வேண்டாமா? (கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா? அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா? உங்களுக்கிடையில் மரணத்தையும் நாமே ஏற்படுத்தியுள்ளோம்; எனவே நம்மை எவரும் மிகைக்க முடியாது. (அன்றியும் உங்களைப் போக்கி விட்டு) உங்கள் போன்றோரை பதிலாகக் கொண்டு வந்து நீங்கள் அறியாத உருவத்தில் உங்களை உண்டாக்கவும் (நாம் இயலாதவர்கள் அல்ல). முதல் முறையாக (நாம் உங்களைப்) படைத்தது பற்றி நிச்சயமாக நீங்கள் அறிவீர்கள் - எனவே (அதிலிருந்து நினைவு கூர்ந்து) நீங்கள் உணர்வு பெற வேண்டாமா? (அல்-குர்ஆன் 56:57-62)

உங்களின் உணவுகளான பயிர்களை முளைப்பிக்கச் செய்பவன் அல்லாஹ்வே!(இப்பூமியில்) விதைப்பதை நீங்கள் கவனித்தீர்களா? அதனை நீங்கள் முளைக்கச் செய்கின்றீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கின்றோமா? நாம் நாடினால் திட்டமாக அதனைக் கூளமாய் ஆக்கிவிடுவோம் - அப்பால் நீங்கள் ஆச்சரியப்பட்டுக் கொண்டு இருப்பீர்கள். ‘நிச்சயமாக நாம் கடன் பட்டவர்களாகி விட்டோம். ‘மேலும், (பயிர்களிலிருந்து எதுவும் பெற முடியாதவர்களாகத்) தடுக்கப்பட்டு விட்டோம்’ (என்றும் கூறிக் கொண்டிருப்பீர்கள்). (அல்-குர்ஆன் 56:63-67)உங்களின் குடிநீரை உருவாக்குபவனும் அல்லாஹ்வே!அன்றியும், நீங்கள் குடிக்கும் நீரைக் கவனித்தீர்களா? மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்குகிறோமா? நாம் நாடினால், அதைக் கைப்புள்ள தாக்கியிருப்போம்; (இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா? (அல்-குர்ஆன் 56:68-70)

நெருப்பை உண்டு பண்ணுபவனும் அல்லாஹ்வே!நீங்கள் மூட்டும் நெருப்பை கவனித்தீர்களா? அதன் மரத்தை நீங்கள் உண்டாக்கினீர்களா? அல்லது நாம் உண்டு பண்ணுகிறோமா? நாம் அதனை நினைவூட்டுதாகவும், பயணிகளுக்கு பயனளிப்பதற்காகவும் உண்டாக்கினோம். ஆகவே, மகத்தான உம்முடைய ரப்பின் திருநாமத்தைக் கொண்டு தஸ்பீஹு செய்வீராக. (அல்-குர்ஆன் 56:71-74)அல்குர்ஆன் அகிலங்களின் படைப்பாளனாகிய அல்லாஹ்வின் இறுதிவேதமாகும்: -நட்சத்திர மண்டலங்களின் மீது நான் சத்தியம் செய்கிறேன். நீங்கள் அறீவீர்களாயின் நிச்சயமாக இது மகத்தான பிரமாணமாகும். நிச்சயமாக, இது மிகவும் கண்ணியமும் சங்கையும் மிக்க குர்ஆன் ஆகும். பாதுகாக்கப்பட்ட ஏட்டில் இருக்கிறது. தூய்மையானவர்களைத் தவிர (வேறெவரும்) இதனைத் தொட மாட்டார்கள். அகிலத்தாரின் இறைவனால் இது இறக்கியருளப்பட்டது. அவ்வாறிருந்தும், (குர்ஆனின் மகத்தான) இச்செய்தி பற்றி நீங்கள் அலட்சியமாக இருக்கிறீர்களா? நீங்கள் பொய்ப்பிப்பதை (இறைவன் தந்த) உங்கள் பாக்கியங்களுக்கு (நன்றியாக) ஆக்குகின்றீர்களா? (அல்-குர்ஆன் 56:75-82)

Sunday, December 12, 2010

பொறுமையை கொண்டு சுவனத்தை வென்ற பெண்மணி!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அதாஉ இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) கூறினார்;

இப்னு அப்பாஸ்(ரலி) என்னிடம், 'சொர்க்கவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?' என்று கேட்டார்கள். நான், 'ஆம்; (காட்டுங்கள்)' என்று சொன்னேன். அவர்கள், இந்தக் கறுப்பு நிறப் பெண்மணிதாம் அவர்.

இவர் (ஒரு முறை) நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'நான் வலிப்பு நோயால் (அடிக்கடிப்) பாதிக்கப்படுகிறேன். அப்போது என் (உடலிலிருந்து ஆடை விலகி ) உடல் திறந்து கொள்கிறது. எனவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்கு பதிலாக) உனக்கு சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன்' என்று கூறினார்கள். இந்தப் பெண்மணி, 'நான் பொறுமையாகவே இருந்துவிடுகிறேன். ஆனால், (வலிப்பு வரும்போது ஆடை விலகி ) என் உடல் திறந்துகொள்கிறது. அப்படித் திறந்து கொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார். அவ்வாறே நபி(ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.
நூல்; புஹாரி எண் 5652

அன்பானவர்களே! நமக்கு நோய் வருமென்றால், அதற்காக மருத்துவம் செய்வோம்; அதோடு அல்லாஹ்விடம் துஆ செய்வோம். அந்த நோய் சில நாட்களில் தீர்ந்துவிடும் என்றால் பிரச்சினையில்லை. ஆனால் நோய் தீர தாமதமாகும் நிலை ஏற்பட்டால், அல்லது நோய் தீராமலேயே போய்விட்டால் அங்கே அல்லாஹ்வின் நாட்டம் என பொறுமை கொள்வதை விடுத்து, அல்லாஹ்வின் அருள்மீது நம்பிக்கையிழந்து அல்லாஹ்வின் மீதே வெறுப்புறுவதை பார்க்கிறோம்.

இன்னும் சிலர் அல்லாஹ்விடம் கேட்டு எந்த பலனுமில்லை என்று தீர்மானித்து, தர்காவிடம் சரணடைந்து அங்கே ஈமானையும் பறிகொடுத்து, சில நேரங்களில் கற்பு- பொருளாதாரம் இவ்வாறாக பல்வேறு இழப்புகளை தமக்கு தாமே ஏற்படுத்திக் கொள்வதை பார்க்கிறோம்.

ஆனால், மேலே உள்ள பொன்மொழியில், ஒரு பெண்மணி வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர், தனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு நபியவர்களிடம் வேண்ட, அப்பெண்மணியின் இம்மை வாழ்வின் சுகத்தை விட மறுமை பாக்கியம் அப்பெண்ணிற்கு கிடைக்கவேண்டும் என விரும்பிய இறைத்தூதர்[ஸல்] அவர்கள், உனக்கு நிவாரணம் வேண்டுமா; அல்லது சொர்க்கம் வேண்டுமா என்று கேட்ட மாத்திரமே,

தான் நோயால் வாடினாலும் பரவாயில்லை தனக்கு அல்லாஹ் தந்த நோயை போருந்திக்கொண்டு, அழகிய பொறுமையை மேற்கொண்டு சுவனத்தை பெறவே விரும்புகிறேன் என்றார்களே! அதோடு, தனது நோயின் போது கூட, தான் அறியாத நிலையில் கூட தனது ஆடை விலகிவிடக் கூடாது என விரும்பி, அதற்காக மட்டும் துஆ செய்யுமாறு அப்பெண்மணி இறைத்தூதரிடம் வேண்டுகிறார்களே! அதுதான் நபித் தோழியர்களின் இறையச்சம்.

ஆனால், இன்றைக்கு நம்முடைய பெண்களில் பெரும்பாலோர், பர்தா அணிவதில்லை. அதோடு அணிந்திருக்கும் சேலை தலையிலிருந்து நழுவினாலோ, அல்லது முன்பகுதியிலிருந்து விலகினாலோ கூட பெரும்பாலும் அலட்டிக்கொள்வதில்லை. காரணம் நம்முடைய பெண்களை நவீனம் அந்த அளவுக்கு நாசமாக்கியுள்ளது. இத்தகைய பெண்களுக்கு மட்டுமின்றி, அழகிய பொறுமைக்கும் இந்த நபித் தோழியின் வாழ்வில் மிகப்பெரும் படிப்பினை உள்ளது.

எல்லாம் வல்ல அல்லாஹ், நிறத்தால் கருப்பான, உள்ளத்தால் வெண்மையான அந்த நபித் தோழியை சுவனத்தில் பார்க்கும் பாக்கியத்தை நமக்குத் தந்தருள்வானாக!