In The Name Of Allah

உலக மக்களுக்கு ஓர் இறையை நிலைநாட்ட உத்தம நபியின் மூலம் அருள் மறையாம் அல்குர்ஆணை வழங்கிய அழகிய மார்க்கம்

Wednesday, December 15, 2010

படைப்பாளனின் இறுதிவேதம்!

படைப்பாளன் நீங்களா? இறைவனா? உங்களைப் படைப்பவன் அல்லாஹ்வே!

அகிலங்களின் இறைவனான அல்லாஹ் கூறுகிறான்:நாமே உங்களைப் படைத்தோம். எனவே, (நாம் கூறுவதை) நீங்கள் உண்மையென்று நம்ப வேண்டாமா? (கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா? அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா? உங்களுக்கிடையில் மரணத்தையும் நாமே ஏற்படுத்தியுள்ளோம்; எனவே நம்மை எவரும் மிகைக்க முடியாது. (அன்றியும் உங்களைப் போக்கி விட்டு) உங்கள் போன்றோரை பதிலாகக் கொண்டு வந்து நீங்கள் அறியாத உருவத்தில் உங்களை உண்டாக்கவும் (நாம் இயலாதவர்கள் அல்ல). முதல் முறையாக (நாம் உங்களைப்) படைத்தது பற்றி நிச்சயமாக நீங்கள் அறிவீர்கள் - எனவே (அதிலிருந்து நினைவு கூர்ந்து) நீங்கள் உணர்வு பெற வேண்டாமா? (அல்-குர்ஆன் 56:57-62)

உங்களின் உணவுகளான பயிர்களை முளைப்பிக்கச் செய்பவன் அல்லாஹ்வே!(இப்பூமியில்) விதைப்பதை நீங்கள் கவனித்தீர்களா? அதனை நீங்கள் முளைக்கச் செய்கின்றீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கின்றோமா? நாம் நாடினால் திட்டமாக அதனைக் கூளமாய் ஆக்கிவிடுவோம் - அப்பால் நீங்கள் ஆச்சரியப்பட்டுக் கொண்டு இருப்பீர்கள். ‘நிச்சயமாக நாம் கடன் பட்டவர்களாகி விட்டோம். ‘மேலும், (பயிர்களிலிருந்து எதுவும் பெற முடியாதவர்களாகத்) தடுக்கப்பட்டு விட்டோம்’ (என்றும் கூறிக் கொண்டிருப்பீர்கள்). (அல்-குர்ஆன் 56:63-67)உங்களின் குடிநீரை உருவாக்குபவனும் அல்லாஹ்வே!அன்றியும், நீங்கள் குடிக்கும் நீரைக் கவனித்தீர்களா? மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்குகிறோமா? நாம் நாடினால், அதைக் கைப்புள்ள தாக்கியிருப்போம்; (இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா? (அல்-குர்ஆன் 56:68-70)

நெருப்பை உண்டு பண்ணுபவனும் அல்லாஹ்வே!நீங்கள் மூட்டும் நெருப்பை கவனித்தீர்களா? அதன் மரத்தை நீங்கள் உண்டாக்கினீர்களா? அல்லது நாம் உண்டு பண்ணுகிறோமா? நாம் அதனை நினைவூட்டுதாகவும், பயணிகளுக்கு பயனளிப்பதற்காகவும் உண்டாக்கினோம். ஆகவே, மகத்தான உம்முடைய ரப்பின் திருநாமத்தைக் கொண்டு தஸ்பீஹு செய்வீராக. (அல்-குர்ஆன் 56:71-74)அல்குர்ஆன் அகிலங்களின் படைப்பாளனாகிய அல்லாஹ்வின் இறுதிவேதமாகும்: -நட்சத்திர மண்டலங்களின் மீது நான் சத்தியம் செய்கிறேன். நீங்கள் அறீவீர்களாயின் நிச்சயமாக இது மகத்தான பிரமாணமாகும். நிச்சயமாக, இது மிகவும் கண்ணியமும் சங்கையும் மிக்க குர்ஆன் ஆகும். பாதுகாக்கப்பட்ட ஏட்டில் இருக்கிறது. தூய்மையானவர்களைத் தவிர (வேறெவரும்) இதனைத் தொட மாட்டார்கள். அகிலத்தாரின் இறைவனால் இது இறக்கியருளப்பட்டது. அவ்வாறிருந்தும், (குர்ஆனின் மகத்தான) இச்செய்தி பற்றி நீங்கள் அலட்சியமாக இருக்கிறீர்களா? நீங்கள் பொய்ப்பிப்பதை (இறைவன் தந்த) உங்கள் பாக்கியங்களுக்கு (நன்றியாக) ஆக்குகின்றீர்களா? (அல்-குர்ஆன் 56:75-82)

Sunday, December 12, 2010

பொறுமையை கொண்டு சுவனத்தை வென்ற பெண்மணி!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அதாஉ இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) கூறினார்;

இப்னு அப்பாஸ்(ரலி) என்னிடம், 'சொர்க்கவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?' என்று கேட்டார்கள். நான், 'ஆம்; (காட்டுங்கள்)' என்று சொன்னேன். அவர்கள், இந்தக் கறுப்பு நிறப் பெண்மணிதாம் அவர்.

இவர் (ஒரு முறை) நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'நான் வலிப்பு நோயால் (அடிக்கடிப்) பாதிக்கப்படுகிறேன். அப்போது என் (உடலிலிருந்து ஆடை விலகி ) உடல் திறந்து கொள்கிறது. எனவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்கு பதிலாக) உனக்கு சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன்' என்று கூறினார்கள். இந்தப் பெண்மணி, 'நான் பொறுமையாகவே இருந்துவிடுகிறேன். ஆனால், (வலிப்பு வரும்போது ஆடை விலகி ) என் உடல் திறந்துகொள்கிறது. அப்படித் திறந்து கொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார். அவ்வாறே நபி(ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.
நூல்; புஹாரி எண் 5652

அன்பானவர்களே! நமக்கு நோய் வருமென்றால், அதற்காக மருத்துவம் செய்வோம்; அதோடு அல்லாஹ்விடம் துஆ செய்வோம். அந்த நோய் சில நாட்களில் தீர்ந்துவிடும் என்றால் பிரச்சினையில்லை. ஆனால் நோய் தீர தாமதமாகும் நிலை ஏற்பட்டால், அல்லது நோய் தீராமலேயே போய்விட்டால் அங்கே அல்லாஹ்வின் நாட்டம் என பொறுமை கொள்வதை விடுத்து, அல்லாஹ்வின் அருள்மீது நம்பிக்கையிழந்து அல்லாஹ்வின் மீதே வெறுப்புறுவதை பார்க்கிறோம்.

இன்னும் சிலர் அல்லாஹ்விடம் கேட்டு எந்த பலனுமில்லை என்று தீர்மானித்து, தர்காவிடம் சரணடைந்து அங்கே ஈமானையும் பறிகொடுத்து, சில நேரங்களில் கற்பு- பொருளாதாரம் இவ்வாறாக பல்வேறு இழப்புகளை தமக்கு தாமே ஏற்படுத்திக் கொள்வதை பார்க்கிறோம்.

ஆனால், மேலே உள்ள பொன்மொழியில், ஒரு பெண்மணி வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர், தனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு நபியவர்களிடம் வேண்ட, அப்பெண்மணியின் இம்மை வாழ்வின் சுகத்தை விட மறுமை பாக்கியம் அப்பெண்ணிற்கு கிடைக்கவேண்டும் என விரும்பிய இறைத்தூதர்[ஸல்] அவர்கள், உனக்கு நிவாரணம் வேண்டுமா; அல்லது சொர்க்கம் வேண்டுமா என்று கேட்ட மாத்திரமே,

தான் நோயால் வாடினாலும் பரவாயில்லை தனக்கு அல்லாஹ் தந்த நோயை போருந்திக்கொண்டு, அழகிய பொறுமையை மேற்கொண்டு சுவனத்தை பெறவே விரும்புகிறேன் என்றார்களே! அதோடு, தனது நோயின் போது கூட, தான் அறியாத நிலையில் கூட தனது ஆடை விலகிவிடக் கூடாது என விரும்பி, அதற்காக மட்டும் துஆ செய்யுமாறு அப்பெண்மணி இறைத்தூதரிடம் வேண்டுகிறார்களே! அதுதான் நபித் தோழியர்களின் இறையச்சம்.

ஆனால், இன்றைக்கு நம்முடைய பெண்களில் பெரும்பாலோர், பர்தா அணிவதில்லை. அதோடு அணிந்திருக்கும் சேலை தலையிலிருந்து நழுவினாலோ, அல்லது முன்பகுதியிலிருந்து விலகினாலோ கூட பெரும்பாலும் அலட்டிக்கொள்வதில்லை. காரணம் நம்முடைய பெண்களை நவீனம் அந்த அளவுக்கு நாசமாக்கியுள்ளது. இத்தகைய பெண்களுக்கு மட்டுமின்றி, அழகிய பொறுமைக்கும் இந்த நபித் தோழியின் வாழ்வில் மிகப்பெரும் படிப்பினை உள்ளது.

எல்லாம் வல்ல அல்லாஹ், நிறத்தால் கருப்பான, உள்ளத்தால் வெண்மையான அந்த நபித் தோழியை சுவனத்தில் பார்க்கும் பாக்கியத்தை நமக்குத் தந்தருள்வானாக!

Saturday, December 4, 2010

1. கண்திருஷ்டி என்றால் என்ன?

தீங்கை ஏற்படுத்தும் ஒருவரது பார்வைக்கு கண்திருஷ்டி அல்லது கண்ணேறு என்று கூறுவார்கள்.
நபி (ஸல்) அவர்கள், 'கண்ணேறு (ஏற்படுவது) உண்மையே' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி), நூல்: புஹாரி 5740, 5944,)

'ஆந்தையினால் ஏதும் இல்லை, (ஆந்தை அலறுவதால் ஏதும் இல்லை) கண்ணேறு உண்மையாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஹாபிஸ் அத்தைமீமி (ரலி), நூல்: திர்மிதி 2140)

2. கண்திருஷ்டி எவ்வாறு ஏற்படுகிறது?

கண்திருஷ்டி கெட்டவர்களினால் ஏற்படுகிறது, அதற்கு நபி (ஸல்) அவர்களின் இந்த ஹதீஸ் ஆதாரமாகும்.

கண்ணேறு பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, 'அது ஷைத்தானின் வேலையாகும்' என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி), நூல்: அபூதாவூது 3859)

3. கண்திருஷ்டியின் பாதிப்புகள் எவ்வாறு இருக்கும்?

கண்ணேறு முகத்தில் கருஞ்சிவப்பான படர்தாமரையை உண்டாக்கும். அதற்கான ஆதாரம்.

நபி (ஸல்) அவர்கள் என் வீட்டில் ஒரு சிறுமியைப் பார்த்தார்கள். அவளுடைய முகத்தில் கருஞ்சிவப்பான படர்தாமரை ஒன்று இருந்தது. நபி (ஸல்) அவர்கள் இவளுக்கு ஓதிப்பாருங்கள். ஏனெனில் இவள் மீது கண்ணேறு பட்டிருக்கிறது என்று சொன்னார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புஹாரி 5739)

கண்திருஷ்டியினால் வியாதிகள், சுகவீனம் உண்டாகும் என்பதை மேற்கண்ட நபிமொழியிலிருந்து விளங்கிக் கொள்ள முடிகிறது.

விதியை மாற்றுவதை மாற்றும் வலிமை வாய்ந்தது. அதற்கான ஆதாரம்.

'அல்லாஹ்வின் தூதரே! ஜஃபரின் குழந்தைகளுக்கு அடிக்கடி கண்பட்டு விடுகிறது. அவர்களுக்காக நான் மந்திரிக்கலாமா? என்று அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'ஆம்! விதியை வென்று விடக்கூடிய ஒன்று இருக்குமானால் கண்ணேறு அதை வென்றுவிடும்' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: உபைத் பின் ரிபாஆ அஸ்ஸுரகீ (ரலி), நூல்கள்: அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா 3510, திர்மிதி 2136)

விதியை எதுவும் மாற்றாது, மாற்ற முடியாது. அப்படி ஏதாவது ஒன்று இருந்திருந்தால் அதை (அந்த ஒன்றை) இந்தக் கண்ணேறு மாற்றும், விதியை மாற்றாது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

4. கண்திருஷ்டியிலிருந்து மீள்வது எப்படி?

எளிமையான ஒரே வழி ஃபலக், நாஸ் என்ற அல்குர்ஆனின் கடைசி இரண்டு அத்தியாங்களை ஓதுவது தான்.

'ஃபலக், நாஸ் அத்தியாயங்கள் இறங்கும் வரை கண்ணேறு, ஷைத்தான் ஆகியவற்றிலிருந்து நபி (ஸல்) அவர்கள் பாதுகாப்புத் தேடிக் கொண்டிருந்தார்கள். அவ்விரு வசனங்களும் இறங்கிய பின் அதை எடுத்துக் கொண்டு மற்றவைகளை விட்டு விட்டார்கள்' என்று அபூஸயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்கள்: நஸயீ, இப்னுமாஜா 3511, திர்மிதி 2135)

மேற்கண்ட அத்தியாயங்களை ஓதுவதே கண்திருஷ்டி ஏற்படாமல் இருக்க வழியுமாகும்.

5. ஓதிப்பார்த்தல்:

கண்திருஷ்டியிலிருந்து மீள்வதற்கு ஓதிப்பார்க்க அனுமதி உண்டு. அதற்குரிய ஆதாரங்கள்.

'விஷகடி, கண்ணேறு, சிரங்கு ஆகியவற்றுக்காக மந்திரிக்க நபி (ஸல்) அவர்கள் அனுமதித்தார்கள்' என்று அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: திர்மிதி 2132)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்ணேறுவி(ன் தீய விளைவி)லிருந்து விடுபட ஓதிப்பார்த்துக் கொள்ளும்படி கட்டளையிட்டார்கள் அல்லது எனக்குக் கட்டளையிட்டார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புஹாரி 5738)

'சிரங்கு, கண்ணேறு ஆகியவற்றுக்குத் தவிர மந்திரித்தல் கிடையாது' நபிமொழி. (அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி), நூல்: திர்மிதி 2134)

மந்திரித்தல் ஓதிப்பார்த்தல் இரண்டும் ஒரே பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

நபி (ஸல்) அவர்கள் அனுமதித்த முறையில் ஓதிப்பார்ப்பது அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும். அதுவல்லாத முறையில் ஓதிப்பார்ப்பது தடுக்கப்பட்டதாகும். அதற்குரிய ஆதாரங்கள்.

'யார் சூடுபோட்டுக் கொள்கிறாரோ அல்லது மந்திரிக்கிறாரோ அவர் தவக்குலில் (உறுதியான நம்பிக்கையில்) இருந்து நீங்கி விட்டார்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா (ரலி), நூல்கள்: அஹ்மது, நஸயீ, இப்னுமாஜா, இப்னுஹிப்பான், ஹாகிம், திர்மிதி 2131)

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் கண்திருஷ்டியை கழிப்பதற்காக கட்டப்பட்ட கயிற்றை அறுக்குமாறு கட்டளையிட்டார்கள். மிருகங்களுக்கு கூட கறுப்புக் கயிறு கட்ட நபி (ஸல்) அவர்கள் அனுமதிக்க வில்லை. மனிதர்களுக்கு எப்படி அதை கட்ட முடியும்.

நான் அல்;லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய பிரயாணம் ஒன்றில் அவர்களுடன் இருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தூதுவர் ஒருவரை அனுப்பி எந்த ஒட்டகத்தின் கழுத்திலும் (ஒட்டக வாரினால் ஆன கண் திருஷ்டி கழிவதற்காக கட்டப்படுகின்ற) கயிற்று மாலையோ அல்லது (காற்று கருப்பை விரட்டுவதற்காக கட்டப்படுகின்ற) வேறெந்த மாலையோ இருக்கக் கூடாது. அப்படியிருந்தால் கட்டாயம் அதைத் துண்டித்து விட வேண்டும் என்று (பொது மக்களிடையே) அறிவிப்புச் செய்தார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல்லாஹ் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் அப்போது மக்கள் தங்கள் உறங்கும் இடத்தில் இருந்தார்கள் என்று அபூபஷீர் (ரலி) அவர்கள் கூறியதாக நான் எண்ணுகிறேன் என்று கூறுகிறார்கள். (நூல்: புஹாரி 3005)

'எந்த வித விசாரணையும் இன்றி சொர்க்கம் செல்லும் எழுபதினாயிரம் பேர் ஓதிப் பார்க்காது, இறைவனையே சார்ந்திருப்பவர்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி 5705)
இங்கே ஓதிப்பார்ப்பது என்பது நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த முறையில் அமையாததை குறிக்கும். நபி (ஸல்) அவர்கள் தனக்குத் தானே ஓதிப்பார்த்திருக்கிறார்கள் என்பதிலிருந்தும் அனுமதிக்கப்பட்ட முறையில் ஓதிப்பார்க்கலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

6. ஓதிப்பார்க்கும் முறை:

நபி (ஸல்) அவர்கள் தமது படுக்கைக்கு (உறங்கச்) சென்றால் ஒவ்வொரு இரவிலும் தமது உள்ளங்கைகளை இணைத்து அதில் குல்ஹுவல்லாஹுஅஹத், குல்அவூது பிரப்பில் ஃபலக், குல்அவூது பிரப்பின் னாஸ் ஆகிய (112,113,114) அத்தியாயங்களை ஓதி ஊதிக் கொள்வார்கள். பிறகு தம் இரு கைகளால் (அவை எட்டும் அளவிற்கு) தமது உடலில் இயன்ற வரையில் தடவிக் கொள்வார்கள். முதலில் தலையில் ஆரம்பித்து பிறகு முகம் பிறகு தம் உடலின் முற்பகுதியில் கைகளால் தடவிக் கொள்வார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி), நூல்: புஹாரி 5017)

7. நடை முறை:

நடை முறையில் கண்திருஷ்டியை கழிக்க 'தலைசுற்றிப் போடுதல்' என்ற முறை உள்ளது. இது மாற்றுமத சமூகத்திலிருந்து முஸ்லிம் சமுதாயத்தில் நுழைந்து விட்ட வழக்கமாகும். பட்ட மிளகாய், உப்பு, முச்சந்தி மண், வீட்டுக் கூறையின் ஓலை இவை போன்றவற்றை கண்திருஷ்டி பட்டவரின் தலையை மூன்று முறை சுற்றி நெருப்பில் போட்டு விடுவார்கள். இன்னும் இது போன்ற வழக்கங்களும் நடைமுறையில் உள்ளன.

இம்முறைகள் முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டிய மூடப்பழக்கமாகும். இதனால் கண்திருஷ்டி குணமாகாது.

போர்க்கள புயல்… திப்பு சுல்தான் – 2

போர்க்கள புயல்… திப்பு சுல்தான் – 2

Thursday, December 2, 2010

ஏக இறைவனின் இக்கேள்விகள் மூலம் சிந்த்தித்து, சீர்தூக்கிப் பார்ப்போரே அறிவுடையோர்

(கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா?

அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கிறோமா?

உங்களுக்கிடையில் மரணத்தையும் நாமே ஏற்படுத்தியுள்ளோம்; எனவே நம்மை எவரும் மிகைக்க முடியாது.

(அன்றியும் உங்களைப் போக்கி விட்டு) உங்கள் போன்றோரை பதிலாகக் கொண்டு வந்து நீங்கள் அறியாத உருவத்தில் உங்களை உண்டாக்கவும் (நாம் இயலாதவர்கள் அல்ல).

முதல் முறையாக (நாம் உங்களைப்) படைத்தது பற்றி நிச்சயமாக நீங்கள் அறிவீர்கள். எனவே (அதிலிருந்து நினைவு கூர்ந்து) நீங்கள் உணர்வு பெற வேண்டாமா?

(பூமியில்) விதைப்பதை நீங்கள் கவனித்தீர்களா?

அதனை நீங்கள் முளைக்க செய்கிறீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கிறோமா?

நாம் நாடினால் திட்டமாக அதனைக் கூளமாக்கி விடுவோம்-அப்பால் நீங்கள் ஆச்சர்யப்பட்டுக் கொண்டு இருப்பீர்கள்.

"நிச்சயமாக நாம் கடன் பட்டவர்களாகி விட்டோம்.

மேலும் (பயிர்களிலிருந்து எதுவும் பெற முடியாதவர்களாகத்) தடுக்கப்பட்டு விட்டோம்" (என்றும் கூறிக் கொண்டிருப்பீர்கள்).

அன்றியும், நீங்கள் குடிக்கும் நீரை கவனித்தீர்களா?

மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்குகிறோமா?

நாம் நாடினால், அதை கைப்புள்ளதாக்கியிருப்போம்; (இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?

நீங்கள் மூட்டும் நெருப்பை கவனித்தீர்களா?

அதன் மரத்தை நீங்கள் உண்டாக்கினீர்களா? அல்லது நாம் உண்டு பண்ணுகிறோமா?

ஆகவே, மகத்தான உம்முடைய ரப்பின் (அல்லாஹ்) திருநாமத்தைக் கொண்டு தஸ்பீஹ் (புகழ்தல்) செய்வீராக.


அல் குர்ஆன்: 56 - 58 லிருந்து 74 வரை.

'குல் ஹுவல்லாஹு அஹத்' எனும் (112 வது) அத்தியாயத்தின் சிறப்பு.


அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.
ஒருவர் 'குல்ஹுவல்லாஹு அஹத்' எனும் (112 வது) அத்தியாயத்தைத் திரும்பத் திரும்ப ஓதிக்கொண்டிருந்ததை மற்றொரு மனிதர் செவிமடுத்தார். (இதைக்கேட்ட) அந்த மனிதர் விடிந்ததும் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து அதைப் பற்றிக் கூறினார். அந்தச் சிறிய அத்தியாயத்தை(த் திரும்பத் திரும்ப அவர் ஓதியதை) இவர் சாதாரணமாக மதிப்பிட்டதைப் போல் தெரிந்தது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! அந்த அத்தியாயமும் குர்ஆனின் மூன்றில் ஒரு பங்கிற்கு ஈடானதாகும்'' என்று கூறினார்கள்.

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி, 'ஓர் இரவில் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை உங்களில் ஒருவரால் ஓத முடியாதா?' என்று கேட்டார்கள். அதனைச் சிரமமாகக் கருதிய நபித்தோழர்கள், 'எங்களில் யாருக்கு இந்தச் சக்தி உண்டு, இறைத்தூதர் அவர்களே!'' என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் ஒருவனே. அல்லாஹ் தேவையற்றவன்' (என்று தொடங்கும் 112 வது அத்தியாயம்) குர்ஆனின் மூன்றிலொரு பகுதியாகும்' என்று கூறினார்கள்.

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் தங்களின் படுக்கைக்கு (உறங்கச்) சென்றால் ஒவ்வோர் இரவிலும் தம் உள்ளங்கைகளை இணைத்து, அதில் 'குல் ஹுவல்லாஹு அஹத்', 'குல் அஊது பிரப்பில் ஃபலக்', ' குல் அஊது பிரப்பின்னாஸ்' ஆகிய (112, 113, 114) அத்தியாயங்களை ஓதி ஊதிக்கொள்வார்கள். பிறகு தம் இரண்டு கைகளால் (அவை எட்டும் அளவிற்கு) தம் உடலில் இயன்ற வரையில் தடவிக் கொள்வார்கள். முதலில் தலையில் ஆரம்பித்து, பிறகு முகம், பிறகு தம் உடலின் முற்பகுதியில் கைகளால் தடவிக் கொள்வார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள்.
நன்றி:இஸ்லாம்குரல்.ப்லொக்ச்பொட்.காம்

பர்தாவே பாதுகாப்பு

தன்னுடைய குடியிருப்பிற்கு அருகில் உள்ள வல்மார்ட் ஷோரூமிற்கு கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று ரேஹான் சிஹாம் பொருட்களை வாங்குவதற்காக சென்றார். முஸ்லிம்களின் மரபாடையான “ஹிஜாப்’பை அவர் அணிந்திருந்தார். அங்கிருந்த ஒரு கிறிஸ்துவர் அவரை நேரிடையாகப் பார்த்து, “The 12 Days of Christmas” என்னும் பாடலை பாடத் தொடங்கினார். உஸாமா பின் லாடனையும் பயங்கரவாதத் தையும் கிண்டலடிக்கும் வண்ணம் பாடினார்.

சிஹாமுக்கு என்னவோ போலிருந்தது. “என்னைப் பார்த்தால் பயங்கரவாதியாக உனக்கு தெரிகின்றதா?’ எனக் கேட்டார்.
“பயங்கரவாதிகள் வேறு எப்படி இருப்பார்களாம்?’ என்றான் அவன்.

இப்படிப்பட்ட தருணங்களை அமெரிக்க முஸ்லிம்கள் அடிக்கடி எதிர்கொள்ள நேரிடுகின்றது. Pew Research Center என்னும் நிறுவன கணக்கின்படி 53 சதவிகித முஸ்லிம்கள் செப்டம்பர் 2001 தாக்குதலுக்குப் பிறகு, “முஸ்லிமாக’ அமெ ரிக்காவில் வசிப்பது கடினமாகி வருவதாக உணருகிறார்கள். அதிலும் குறிப்பாக ஹிஜாப் அணிந்து கொண்டு பொதுவிடங் களுக்கு செல்வது மிகவும் இடரளிக்கும் செயலாகவே உள்ளது.

தம்முடைய தலைமுடியை மறைக்கின்ற வகையில் எளிமை யான ஒரு முக்காட்டையே (ஸ்கார்ஃப்) பெரும்பாலான பெண் கள் அணிகிறார்கள். பர்தா என சொல்லத்தக்க ஆடையை அணி வது ஒரு குற்றச்செயலாக கருதப்படுகின்றது. பல அரசாங்கங்கள் அந்த நிகழ்விற்குப் பிறகு, பொதுத் தளங்களில் பர்தா அணிந்து வருவதை தடை செய்து விட்டன. பல அரசுகள் தடை செய்வது குறித்து யோசித்து வருகின்றன. ஒரு நிகழ்வை மையப்படுத்தி இஸ்லாமிய அடையாளம் ஒன்றை அடியோடு ஒழித்து இல்லா மலாக்கிவிடும் முயற்சிகளை உலகில் பல அரசுகளும் தீவிரப்படுத்தி வருகின்றன.

முஸ்லிம் பெண்கள் ஏன் ஹிஜாப் அணிகிறார்கள் என்பதை வெளிப்படுத்தும் வகையில் God’s Warriors என்னும் நிகழ்ச்சி ஒன்றை CNN தொலைக்காட்சி சில மாதங்களுக்கு முன் ஒளிபரப்பியது.

“பார்வைகளை என்னுடைய புறத்தோற்றத்தில் இருந்து என்னு டைய அகத்தை நோக்கி நான் திருப்ப எண்ணுகிறேன். எனக்கு பிடிக்காத விதத்தில் என்னை யாரும் அணுகுவதை நான் விரும்ப வில்லை!’ என எகிப்தைச் சார்ந்த ஸிஹாத் அல் ஃகலீக் கூறுகிறார்.

அல்ஃகலீக் ஆங்கிலத்தையும் ஜெர்மனையும் சரளமாக பேசுகி றார். ஐரோப்பாவில் கல்வி கற்றுள்ளார். கிதார் வாசிக்க கற்றுள் ளார். பெண்களுக்காக பாடுபடும் ஓர் அமைப்பில் பணியாற்று கிறார். எப்போதும் ஹிஜாபை அணிந்துள்ளார்.
சமய காரணத்திற்காக மட்டுமல்ல! “சமயக்கடமை என்னுமளவில் இதை விவாதப் பிரச்சனையாக ஆக்குவதை விட பெண்களுக்குத் தேவையான அடக்கம், பண்பு என்னும் வகையில் ஹிஜாப் அணிவதற்கே நான் முக்கியத்துவம் அளிக்கிறேன்’ என்கிறார் அவர்.

சிஹாமை பொருத்தவரை ஹிஜாப் அணிவது ஒரு மார்க்கக் கடமை. “இறைவனின் விருப்பம் அது!’ என்கிறார் அவர். “ஹிஜாப் அணிவது இறையாணை. நாங்கள் திரையிட வேண்டும்; அடக் கத்தோடு இருக்கவேண்டும் என அவன் கட்டளை இட்டுள்ளான்.

ஆனால், நினைத்ததைப் பின்பற்றுவது ஒன்றும் சிஹாமுக்கு அவ்வளவு எளிதான செயலாக இருக்கவில்லை. இத்தனைக்கும் அவர் அணிவது தலையை மறைக்கும் ஸ்கார்ஃப் மட்டுமே.

“ஆரம்பத்தில் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. என் உள்ளம் படபடவென்று அடித்துக்கொண்டது. கடைசியில் எனக்கு நானே கூறிக் கொண்டேன். “என்னவாயினும் சரி, நீ தைரியமாக ஹிஜாப் அணிந்துகொள். ஒருபோதும் யாருக்காகவும் விட்டுவிடாதே!’

ஒரு நல்ல இறைநம்பிக்கை கொண்ட முஸ்லிமாக இருக்க வேண்டுமெனில் ஹிஜாப் அணிந்தே ஆகவேண்டும் என அவர் நினைக்கிறார். இளம் வாலிபர்களுடைய கிண்டலைக் கண்டு அவர் பயந்து மனம் புழுங்கினாலும் இறுதிவரை ஹிஜாபைத் தொடருவது என் னும் முடிவில் உறுதியாக இருக் கிறார்.

இங்கே நம்முடைய பெண்களின் நிலையை கொஞ்சம் ஒப் பிட்டுப் பாருங்கள். ஒரு வி­யம் மட்டும் தெளிவாக விளங்கு கின்றது. எங்கே எதிர்ப்புகள் மிகுகின்றனவோ அங்கேதான் இஸ்லாமை பின்பற்றியே தீர வேண்டும் என்னும் வைராக்கியமும் உறுதிப்பாடும் பிறக் கும் எனத் தோன்றுகின்றது.

மறுபடியும் ஒருமுறை சிஹாம் சொல்வதைக் கேளுங்கள். “”இறை திருப்திக்காக உலகில் வாழ்வதே என்னுடைய எண்ணம். குறிக் கோள். என் னைப் பார்த்தால் பயங்கரவாதியைப்போல இருப்ப தாக மக்கள் கூறுகிறார்கள். நான் பயங்கரவாதியைப் போல காட்சி யளிப்பதைப் பற்றியயல்லாம் கவலைப்பட வில்லை. யாரோ ஒருவருடைய மனதில் பயமுறுத்துவதைப்போல தென்படுவதை விட அசிங்கமாக காட்சியளிப்பதுதான் என்னை உறுத்துகின் றது”
தன்னுடைய இறைநம்பிக்கையில் மிக முக்கியமான பங்கை தனது ஹிஜாப் ஆற்றுவதாக சிஹாம் நம்புகிறார். “என்னிஷ்டப்படி என் வாழ்க்கையை வாழ்வதற்கு நான் இங்கு வரவில்லை. இறைவனுக்கு அடிபணிந்து வாழ்வதற்கே நான் வந்துள்ளேன்’ என்கிறார் அவர்.

- திசையன்
நன்றி: சமுதாயாவ்ற்றுமை.காம்

Wednesday, December 1, 2010

பஜ்ருத் தொழுகையை அதன் நேரத்தை விட்டுப் பிற்படுத்துதல்


கேள்வி : நான் தொழுகையில் ஆர்வமுள்ள ஓர் இளைஞன். எனினும், இரவில் தாமதித்து உறங்குவதால் காலை ஏழு மணிக்கே அலாரம் வைத்து எழுகிறேன். எழுந்தவுடன் பஜ்ரைத் தொழுது விட்டு விரிவுரைகளுக்கு செல்வது வழக்கம். வியாழன் வெள்ளி போன்ற நாட்களில் லுஹருக்குச் சற்று முன்பே விழித்தெழுந்து பஜ்ரைத் தொழுகிறேன். இது பற்றிய சட்டம் என்ன?

ஃபத்வா: பஜ்ருத் தொழுகையை உரிய நேரத்தில் தொழாமல் தாமதித்துத் தொழும் எண்ணத்தில் வேண்டுமென்றே அலாரத்தைத் தாமதமாக வைப்பது தொழுகையை வேண்டுமென்று மனமுரண்டாக விடுவதாகவே கருதப்படும். தொழுகையை வேண்டுமென்று மனமுரண்டாக விடுபவன், சில அறிஞர்களின் பார்வையில் காபிர் ஆவான். – தொழுகையை வேண்டுமென்று விடாமலிருக்க அல்லாஹ் உதவி செய்வானாக!

எனினும் யாருக்குத் தூக்கம் மிகைத்து உரிய நேரத்தை விட்டும் தொழுகை தவறிப் போகிறதோ, அவர் மீது குற்றமில்லை. விழித்தெழுந்ததும் அவர் தொழுது விட வேண்டும். அவ்வாறே குறித்த ஒரு தொழுகையை மறந்து விட்டவர் ஞாபகம் வந்ததும் தொழுது விட வேண்டும்.

அதல்லாமல் வேண்டுமென்றே தொழுகையை அதன் நேரத்தை விட்டும் பிற்படுத்துவது அல்லது தாமதித்துத் தொழ வேண்டும் என்ற நோக்கத்தில் கடிகாரத்தில் நேரம் வைத்துத் தாமதித்து எழுவது இவை அனைத்தும் வேண்டுமென்று தொழுகையை விடுவதாகவே கருதப்படும். இவ்வாறு செய்வது எல்லா அறிஞர்களதும் பார்வையில் மிகப் பெரும் பாவமாகவே கருதப்படுகிறது. என்றாலும் இவன் காபிராகி விடுவானா இல்லையா? என்பதில் உலமாக்கள் மத்தியில் கருத்து வேறுபாடு காணப்படுகிறது.

பெரும்பாலான அறிஞர்கள் இவன் காபிராக மாட்டான் என்று கருதுகின்ற அதேவேளை, சில அறிஞர்கள் அவன் காபிராகி விடுவான் என்று கூறுகின்றனர். இரண்டாவது சாராரின் கூற்றுக்கு ஒத்ததாகவே ஸஹாபாக்களின் நிலைபாடும அமைந்திருந்தது என்பது இங்கு நோக்கத்தக்கது.

‘ஒரு மனிதனுக்கும் ஷிர்க் குப்ருக்கும் இடையிலுள்ள வித்தியாசம் தொழுகையை விடுவதாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம்)

மேலும், ‘நமக்கும் அவர்களுக்கும் இடையிலுள்ள வேறுபாடு தொழுகையாகும். யார் தொழுகையை விடுகிறானோ அவன் காபிராவான்’ என்று கூறினார்கள். (நூல்கள் : அஹ்மத், திர்மிதி, நஸயி, இப்னுமாஜா)

இஸ்லாமின் அடிப்படை நம்பிக்கைகள்

இஸ்லாத்தின் நம்பிக்கைகள் எவை?

ஒரே இறைவனைக் கொண்டும் அவனது மலக்கு (வானவர்) களைக் கொண்டும் வேதங்களைக் கொண்டும், இறை தூதர்களைக் கொண்டும், மறுமையைக் கொண்டும், தெய்வ விதியைக் கொண்டும் நம்பிக்கை கொள்வதே இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கைகள் ஆகும்.

ஏகதெய்வ நம்பிக்கையின் பொருள் என்ன?

இந்தப் பிரபஞ்சத்தில் சிறிதும் பெரிதுமான எல்லா வஸ்துக்களுடையவும் படைப்பாளனும் பரிபாலகனும் ஆகிய அல்லாஹ் அவனது உள்ளமை, குணம், செயல்பாடு முதலானவற்றில் எல்லாம் ஏகனும் ஒப்புமையற்றவனும் ஆவான். சர்வ வல்லமையும் எல்லாவற்றையும் மிகைத்தவனும் சர்வ பரிபூரணமானவனும் ஆகிய அவனுக்கு மட்டுமே வணக்க வழிபாடுகளை அர்ப்பணிக்க வேண்டும். எல்லாவற்றையும் படைத்த இறைவன் ஒருவன் உண்டு என்ற நம்பிக்கையுடன் சுருங்கி விடாது அளவற்ற அருளாளனும் எல்லாவற்றையும் அறிபவனுமாகிய அவனிடம் மட்டுமே பிரார்த்தனை மற்றும் வழிபாடுகள் செய்ய வேண்டும் என்ற கொள்கையே இஸ்லாத்தின் ஏக தெய்வ நம்பிக்கையாகும்.

அல்லாஹ் யார்?

சர்வ வல்லமை மிக்க இறைவனைக் குறிக்கும் அரபிப் பதமே அல்லாஹு. எல்லா விதமான வணக்க வழிபாடுகளுக்கும் உரித்தான இறைவன் என்பதே அல்லாஹு என்ற பதத்தின் மொழி ரீதியான அதன் பொருள் ஆகும். அரபு நாடுகளில் வசிக்கும் முஸ்லிமல்லாதவர்களும் இறைவனைக் குறித்து அல்லாஹ் என்றே குறிப்பிடுகின்றனர். அல்லாஹ் என்ற பதத்திற்க ஆண்பாலோ பெண்பாலோ பன்மையோ கிடையாது. இறைவனது மகத்துவத்திற்கு பரிபூரணமாக ஒத்துப் போவதுடன் பிற மொழிகளில் உள்ள பதத்தைக் காட்டிலும் மிகச்சரியான னொருளை வழங்குவதாலும் முஸ்லிம்கள் இறைவனை அல்லாஹ் என்று அழைக்கின்றனர். ஏக இறைவனை அவனது பரிசுத்தத் தன்மைக்கும்மகத்துவத்திற்கும் ஏற்ப எந்த நாமத்தில் குறிப்பிடுவதையும் இஸ்லாம் தடை செய்யவில்லை.

மலக்குகள் என்பவர்கள் யார்?

மனிதனின் சாதாரண புலன் அறிவைக் கொண்டு புரிந்து கொள்ளவோ உணர்ந்து கொள்ளவோ இயலாத ஒளியைக் கொண்டு படைக்கப்பட்ட இறையடியார்களே மலக்குகள் ஆவர். இறைவனது கட்டளையை நிராகரிக்க முடியாத இயற்கை அமைப்பில் பல் வேறு காரியங்களை நிர்வகிப்பதற்காக அவர்கள் படைக்கப்பட்டுள்ளனர்.

வேதங்கள் என்பது என்ன?

மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்று கற்றுக் கொடுப்பதற்காக நியமிக்கப்பட்ட இறை தூதர்கள் மூலமாக இறைவனால் வழங்கப்பட்ட புனித நூல்களே வேதங்கள் எனப்படுகின்றன. இகபர வாழ்வின் வெற்றிக்கு வழிகோலும் வழிகாட்டுதல்கள் அடங்கிய தெய்வீக கட்டளைகளை உள்ளடக்கியதே வேத கிரந்தங்கள். இறுதி வேதமாகிய திருக்குர்ஆனில் நான்கு வேதங்களின் பெயர் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் மூலமாக வழங்கப்பட்ட தவ்றாத், தாவூது அலைஹிஸ்ஸலாம் அவர்கய் மூலமாக வழங்கப்பட்ட ஸபூர், ஈஸா அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் மூலமாக வழங்கப்பட்ட இஞ்சீல் முஹம்மது (ஸல்) அவர்கள் மூலமாக வழங்கப்பட்ட குர்ஆன் ஆகியவை ஆகும். இவை அல்லாமல் மற்ற இறை தூதர்களுக்கும் வேதங்கள் அருளப்பட்டன என்று திருக்குர்ஆன் தெளிவாகக் கூறுகின்றது. எல்லா வேதங்களும் மனிதனை வழிகேட்டிலிருந்து விலக்கி நேர்வழியின்பால் அழைத்துச் செல்ல இறைவன் அருளியவை ஆகும்.

இறை தூதர்கள் யார்?

மனித சமூகத்திற்கு நன்மை தீமை குறித்து எடுத்துக்கூறுவதற்காக இறைவன் மனிதர்களிலிருந்து சிலரை தனது தூதர்களாகத் தேர்ந்தெடுத்து தூதுப் பணியை அவர்களிடம் ஒப்படைத்தான். அவ்வாறு இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே நபிமார்கள் அல்லது இறை தூதர்கள் எனப்படுகின்றனர். மனிதர்களை நேர்வழியின்பால் அழைப்பதற்காக எல்லா சமூகங்களிலும் இறைத்தூதர்கள் வருகை தந்தனர். அவர்கள் அனைவரும் மனித சமூகத்திற்கு முன் மாதிரிகளாக முழு மனிதர்களாக வாழ்க்கை நடத்தினர். அவர்களில் எவருமே தாங்கள் தெய்வங்கள் என்றோ தெய்வத்தின் அவதாரங்கள் என்றோ வாதிட வில்லை. அவர்கள் அனைவரும் முழுக்க முழுக்க மனிதர்களே. இறைவனால் நியமிக்கப்பட்ட அனைத்து இறைத்தூதர்களையும் நம்புவது முஸ்லிமின் மீது கடமையாகும்.

(ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர்;. அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயங் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்;. அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்;. (திருக்குர்ஆன் 2:213)

மரணத்திற்குப் பிந்தைய வாழ்வு குறித்து இஸ்லாம் என்ன கூறுகின்றது?

மனித வாழ்வின் முடிவல்ல மரணம். மாறாக நிரந்தரமான மற்றொரு வாழ்வின் தொடக்கமே அது என இஸ்லாம் கூறுகின்றது. இவ்வுலகில் செய்யும் கருமங்களுக் கேற்றவாறு தகுந்த கூலி வழங்கப்படுவது மரணத்திற்குப் பிந்தைய வாழ்வில் ஆகும். யுக முடிவு நாளில் எல்லாம் அழிந்த பின்னர் மனிதர்கள் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்பட்டு இறைவனால் விசாரணை செய்யப்படுவர். சர்வ வல்லமை மிக்க இறைவனுக்கு முன்னால் நடக்கும் விசாரணையில் நாம் செய்த நன்மை தீமைகள் நமக்கு முன்னால் எடுத்துக்காட்டப்படும். பிறகு முற்றிலும் பரிபூரணமான நீதி வழங்கப்படும். நன்மை செய்து வாழ்வைப் பரிசுத்தமாக்கியவர்களுக்கு நற்கூலியாக நிரந்தர சமாதானத்தின் பவனமாகிய சுவனமும் தீமைகள் செய்து வாழ்க்கையைக் களங்கமாக்கியவர்களுக்குத் தண்டனையாக வேதனைகள் மிக்க நரகமும் வழங்கப்படும்.

"யுக முடிவு நாளின் மீது நான் சத்தியம் செய்கின்றேன். நிந்தித்துக் கொண்டிருக்கும் ஆன்மாவின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன். (மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா? அன்று, அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்". (திருக்குர்ஆன் 75 1-4)

விதியின் மீத நம்பிக்கை கொள்வது என்றால் என்ன?

பிரபஞ்சத்தின் அனைத்து வஸ்துக்களும் இறைவன் வகுத்த விதியின் அடிப்படையிலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதுவே விதி எனப்படுகின்றது. அதிலிருந்து மாறுபட்டு நிற்க மனிதன் உட்பட எந்தப் படைப்புகளாலும் இயலாது. மனிதனின் சுற்றுப்புறமும் உடல் அமைப்புகள் கூட இறைவனின் விதியின் அடிப்படையிலேயே நிலை கொண்டுள்ளது. அவனை வந்தடையும் நன்மைகளும் தீங்குகளும் எல்லாம் இந்த விதியின் அடிப்படையிலேயே சம்பவிக்கின்றன. மனித சமூகத்தின் முதலும் முடிவுமான நன்மைகளைக் குறித்தும் தீமைகளைக்குறித்தும் மிகத் தெளிவாக அறிந்த இறைவன் வகுத்த வதிகளின் அடிப்படையிலேயே அவனுக்கு குணமும் தோஷமும் ஏற்படுகின்றது என்பதே இஸ்லாமிய விதி விசுவாசத்தின் உட்கருத்து ஆகும்.
நன்றி: இறைதூது.காம்

நபி மொழிகள்

உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமா? உங்களின் வாழ்நாள் நீள வேண்டுமா?
தனது உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமென்று யார் ஆசைப்படுகின்றாரோ இன்னும் தன் வாழ் நாள் நீள வேண்டுமென்று ஆசைப்படுகின்றாரோ அவர் தன் இரத்த பந்தத்தை சேர்த்து நடக்கட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

அல்லாஹ் உங்களை பாதுகாக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
யார் ஸுப்ஹுத் தொழுகையை தொழுகின்றாரோ அவர் (அன்றைய தினம்) அல்லாஹ்வின் பொறுப்பிலிருக்கின்றார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

உங்களின் பாவங்கள் அதிகமாக இருந்தாலும், அது மன்னிக்கப்பட வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
யார் ஒரு நாளில் நூறு தடவை سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி' என ஓதுகின்றாரோ, அவரின் பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும், அது மன்னிக்கப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

உங்களுக்கும் நரகத்துக்கும் மத்தியில் நாற்பது ஆண்டுகள் துலை தூரம் இருக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
யார் அல்லாஹ்வின் பாதையில் ஒரு நோன்பு நோற்கின்றாரோ, அல்லாஹ் அவரை நாற்பது ஆண்டுகள் தொலை தூரம் நரகத்திலிருந்து தூரமாக்கின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

அல்லாஹ் உங்கள் மீது, அருள்புரிய வேண்டுமென நீங்கள் விரும்புகின்றீர்களா?
யார் என்மீது ஒரு தடவை ஸலவாத்து கூறுகின்றாரோ, அவருக்கு அல்லாஹ் பத்து தடவை ஸலவாத்து கூறுகின்றான் (அருள் புரிகின்றான்); என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

அல்லாஹ் உங்களின் அந்தஸ்தை உயர்த்த வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
யார் அல்லாஹ்வுக்காக பணிந்து நடக்கின்றாரோ, நிச்சயமாக அல்லாஹ் அவரின் அந்தஸ்தை உயர்த்துகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)